Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th September 2023 19:10:49 Hours

4 வது சிங்கப் படையினரால் யாழ் மாணவர்களுக்கு புலமைப்பரிசு

யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின், 521 வது காலாட் பிரிகேட்டின், 4 வது இலங்கை சிங்கப் படையணியின் படையினர் நன்கொடையாளர் ஒருவரின் ஆதரவுடன், நெல்லியடி மற்றும் பருத்தித்துறை பகுதிகளில் ஐந்து மற்றும் ஒன்பது வயதுடைய தகுதியான இரண்டு மாணவர்களுக்கு இரண்டு புலமைப்பரிசில்களை வழங்க ஏற்பாடு செய்தனர்.

ஐந்து வருட காலத்திற்கு ஒவ்வொரு மாதமும் 2000/= ரூபாவினை மாணவர்களின் ஆரம்பக் கல்வியை முடிக்கும் வரை அவர்களின் கல்விச் செலவுகளுக்காக வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.

நெல்லியடி 'கலைமதி' வாசிகசாலையில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 2) புலமைப்பரிசில்கள் வழங்கும் நிகழ்வில், 4 வது இலங்கை சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரி, கிராம சேவை அதிகாரிகள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள் மற்றும் உறவினர்களும் கலந்து கொண்டனர்.