04th September 2023 19:23:49 Hours
வல்வெட்டித்துறை சிதம்பரம் கல்லூரியில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த 50 மாணவர்களுக்கு இராணுவ ஒருங்கிணைப்பு மூலம் பாடசாலை பைகள் வழங்கப்பட்டன. இந்த நன்கொடை இங்கிலாந்தை தளமாகக் கொண்ட ‘செஸ்நட் பவுண்டேஷனால் வழங்கப்பட்டது.
யாழ்ப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 521 வது காலாட் பிரிகேட்டின் 11 வது விஜயபாகு காலாட் படையணியின் லெப்டினன் பீஏடிசி திலகரத்ன அவர்களின் ஒருங்கிணைப்பின் மூலம் தொண்டு நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி நதீத் கௌசல்ய அவர்கள் இந்நிகழ்விற்கு அனுசரணையை வழங்கினார்.
பகிந்தளிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (ஓகஸ்ட் 25) பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றதுடன், அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
521 வது காலாட் பிரிகேட்டின் பிரிகேட் தளபதி மற்றும் 52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி ஆகியோரின் அறிவுறுத்தல்களுக்கு இணங்க இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது. 521 வது காலாட் பிரிகேடின் சிவில் விவகார அதிகாரி, மற்றும் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.