03rd September 2023 21:12:19 Hours
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்கேயூபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி ஐஜீ திருகோணமலை 22 வது காலாட் படைப்பிரிவுக்கும் அதன் கீழ் உள்ள காலாட் பிரிகேட்களுக்கும் 2023 ஓகஸ்ட் 31 , செப்டம்பர் 01 ம் திகதிகளில் முதல் கள விஜயத்தை மேற்கொண்டார்.
முதலில் 2023 ஓகஸ்ட் 31 அவர் 22 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்திற்குச் சென்றார். அதன் போது 22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜிஎம்என் பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ அவர்களால் கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி வரவேற்கப்பட்டதை தொடர்ந்து 5 வது (தொ) இலங்கை பீரங்கி படையணி படையினரால் நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.
பின்னர், அவர் குழு படம் எடுத்தல் மற்றும் படைப்பிரிவின் பங்கு, பணிகள் மற்றும் பொறுப்புகள் குறித்து படைப்பிரிவின் தளபதியால் நிகழ்தப்பட்ட விளக்கக்காட்சியில் கலந்து கொண்டார். அதைத் தொடர்ந்து, அவர் 22 வது காலாட் படைப்பிரிவு படையினருக்கு உரையாற்றியதுடன், அவர் வளாகத்தில் ஒரு மாங்கன்று நடுவதற்கு முன் அவர் அனைத்து நிலையினருடன் தேநீர் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டார்.
பின்னர், கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி அதே நாளில் 221 வது காலாட் பிரிகேட் மற்றும் 2 (தொ) கஜபா படையணிக்கு விஜயம் செய்தார். பிரிகேட் தளபதி மற்றும் கட்டளை அதிகாரிகளால் கிழக்கு தளபதி இராணுவ சம்பிரதாயத்திற்கு அமைய மரியாதையுடன் வரவேற்கப்பட்டார்.
2023 செப்டம்பர் 01 கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி திருகோணமலை மாவட்டச் செயலாளர் திரு.சமிந்த ஹெட்டியாராச்சி மற்றும் பிரதம செயலாளர் திரு. ஆர்எம்பீஎஸ் ரத்நாயக்க ஆகியோருடன் கலந்துரையாடினார். மேலும், கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி ஐஓசீ திருகோணமலை பிரதி தலைவர் திரு.தீபன்ஜன் முகர்ஜி, கோணேஸ்வரம் இந்துக் கோயில் குருக்கள் சண்முகநாதர் மற்றும் அல் துஹுல் மசூதியின் தலைமை மௌலவி முகமது ஜவ்சினாத் ஆகியோரைச் சந்தித்தார்.
அதன்பின், கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி முறையே 223 வது காலாட் பிரிகேட் மற்றும் 222 வது காலாட் பிரிகேட்களுக்கு விஜயம் செய்தார். கிழக்கிற்கு வருகை தந்த பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதிக்கு தங்களுக்குரிய பிரிகேட்களின் பணிகள் மற்றும் பொறுப்புகள் குறித்து விரிவாக விளக்கினர். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி அந்தந்த அமைப்புக்களின் விருந்தினர் பதிவேட்டில் பாராட்டுக் குறிப்புகளை பதிவிட்டார்.
22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜிஎம்என் பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ, பிரிகேட் தளபதிகள் பணிநிலை அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் மற்றும் சி்ப்பாய்கள் விஜயத்தில் கலந்து கொண்டனர்.