03rd September 2023 21:05:57 Hours
சுற்றுச்சூழலில் அர்ப்பணிப்பையும் அக்கறையையும் வெளிப்படுத்தும் வகையில், யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 52 வது காலாட் படைப்பிரிவின் 521 வது காலாட் பிரிகேடின் 4 வது இலங்கை சிங்கப் படையணியின் படையினர், அப்பகுதியிலுள்ள ஏனைய பொறுப்பு வாய்ந்த அரச நிறுவனங்களுடன் இணைந்து 2023 செப்டம்பர் 01 அன்று யாழ்ப்பாணத்தில் உள்ள கண்கவர் சாக்கோட்டை கடற்கரையை சுத்தம் செய்யும் திட்டத்தை முன்னெடுத்தனர்.
அதிகாரிகள்,படையினர்,பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொலிஸார் மற்றும், பருத்தித்துறை பிரதேச செயலக அதிகாரிகள் நிகழ்விற்கு வளங்களை வழங்கினர்.