Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd September 2023 18:24:07 Hours

இராணுவ தலைமையகத்தில் இந்திய தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் பிரதிநிதிகளுடன் 'திங்க் டேங்க்' தொடர்பு

தூதுக்குழுவின் தலைவர் ரியர் அட்மிரல் சஞ்சய் சச்தேவா என்எம் எஸ்டிஎஸ் அவர்களுடன் இந்திய தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் 17 பேர் கொண்ட குழு, இராணுவத் தலைமையகத்திற்கு செவ்வாய்க்கிழமை ( 29 ஓகஸ்ட்) வருகை தந்ததுடன், இராணுவத் தலைமையகத்தில் உள்ள பல்நோக்கு கேட்போர்கூடத்தில் 'திங்க் டேங்க் இன்டராக்ஷன்' செயலமர்வில் கலந்து கொண்டனர்.

'இந்து சமுத்திர பிராந்தியத்தில் மூலோபாய இயக்கவியல்: இலங்கைக் கண்ணோட்டம்' என்ற கருப்பொருளில் செயலமர்வு மூன்று அமர்வுகளை உள்ளடக்கியதுடன், பயிற்சி பணிப்பகத்தின் ஒருங்கிணைப்புடன் ஆராய்ச்சி மற்றும் கோட்பாடு பணிப்பகத்தினால் இச் செயலமர்வு நடாத்தப்பட்டது.

இலங்கைக்கான இந்திய துணை உயர் ஸ்தானிகர் கலாநிதி சத்யஞ்சல் பாண்டே மற்றும் இராணுவ பொதுபணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ ஆகியோர் பிரதம அதிதியாக கலந்துகொண்டனர்.

கலாநிதி சத்யஞ்சல் பாண்டேயின் முக்கிய உரையுடன் அன்றைய நிகழ்வுகள் ஆரம்பமாகியதுடன், ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கலாநிதி ஹரிந்த விதானகே, ‘இந்து சமுத்திர பிராந்தியத்தில் மூலோபாய இயக்கவியல்’ என்ற தலைப்பில் செயலமர்வை நடத்தினார்.

தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தில் செயல்படும் ஆராய்ச்சி ஆய்வாளர் மற்றும் ஆராய்ச்சி உதவியாளர் எம்எஸ் சராணி பட்டுபெண்டிகே மற்றும் அட்மிரல் ஜேஜே ரணசிங்க (ஓய்வு) வீஎஸ்வீ யூஎஸ்பீ, பீஎஸ்சி ஆகியோர் 'தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பைப் பலப்படுத்துதல்' என்ற தலைப்பில் இலங்கைக் கண்ணோட்டம்' மற்றும் இந்து சமுத்திர பிராந்திய அதிகாரங்களின் இருப்பு மற்றும் தேசியப் பாதுகாப்பில் அதன் தாக்கம்' பற்றிய செயலமர்வுகளை நடாத்தினர்.

ஒவ்வொரு செயலமர்விலும் கேள்வி பதில் முறையில் இடம்பெற்றதுடன், இறுதிக் கருத்துக்கள் இராணுவ பொதுபணி பணிப்பாளர் நாயகம் அவர்களினால் வழங்கப்பட்டன. இறுதியில் மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களினால் கலாநிதி சத்யஞ்சல் பாண்டே மற்றும் ரியர் அட்மிரல் சஞ்சய் சச்தேவா என்எம் எஸ்டிஎஸ் ஆகியோருக்கு சிறப்பு நினைவுச்சின்னங்களை வழங்கியதுடன், தூதுக்குழுவின் தலைவர் இராணுவ பொதுபணி பணிப்பாளர் நாயகம் அவர்களுக்கு பாராட்டுச் சின்னத்தையும் வழங்கினார்.

பயிற்சி பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் பீகேஎஸ் நந்தன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ, ஆராய்ச்சி மற்றும் கோட்பாடு பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் பீசீஎல் குணவர்தன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சி, இலங்கையின் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் விகாஸ்சூட், இலங்கையின் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன் கேணல் புனீட் சுஷில், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.