Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

31st August 2023 20:38:23 Hours

இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தளபதி தொண்டர் படையணிக்கு விஜயம்

இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதியாக அண்மையில் நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் டிஎம்கேடிபி புஸ்ஸல்ல ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் இலங்கை இராணுவத் தொண்டர் படையணி பயிற்சிப் பாடசாலையின் உட்கட்டமைப்பு மற்றும் வலுப்படுத்துதலை பார்வையிட திங்கட்கிழமை (ஓகஸ்ட் 28) முறையான விஜயத்தை மேற்கொண்டார்.

வருகை தந்த தளபதியை இலங்கை இராணுவத் தொண்டர் படையணி பயிற்சிப் பாடசாலையின் தளபதி ஜேஏஜே ஜயரத்ன கேஎஸ்பீ அவர்கள் மரியாதையுடன் வரவேற்றதுடன்,இராணுவ சம்பிரதாயங்களுக்கு இணங்க பாதுகாவலர் அரிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன், பயிற்சிப் பாடசாலைக்கு வருகை தந்ததைக் குறிக்கும் வகையில் மரக்கன்று நடப்பட்டது.

இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதியின் தலைமையில் கலந்துரையாடல் இடம் பெற்றதுடன், இலங்கை இராணுவத் தொண்டர் படையணி பயிற்சிப் பாடசாலையின் தளபதியால் பயிற்சிப் கல்லூரியின் நிர்வாகம் மற்றும் பயிற்சி தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.

அதன்பின், தளபதி நிர்வாக உதவிப் பாடநெறி மற்றும் சிப்பாய்களுக்கான செயல்பாட்டு ஆங்கிலப் பாடநெறி தொடர்பாகவும் விளக்கமளித்தார்.

அதே சந்தர்ப்பத்தில் தேர்ச்சி பெற்ற தளபதி தேசிய தொழில் தகுதி நிலை 3 மற்றும் 4 க்கான சான்றிதழ்களை வழங்கினார்.

பின்னர் வருகை தந்த தளபதியினால் உத்வேகமூட்டும் முப்படைகளுக்கு உரை நிகழ்த்தப்பட்டது. இலங்கை இராணுவத் தொண்டர் படையணி பயிற்சிப் கல்லூரியின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றினர்.