31st August 2023 19:20:27 Hours
58 வது காலாட் படைப்பிரிவின் தளபதியும், விசேட படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டபிள்யூடிடபிள்யூஜி இஹலகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ பீடிஎஸ்சீ அவர்களின் 34 வருட காலச் சிறப்புமிக்க பணியின் பின்னர் இராணுவத்திலிருந்து ஓய்வுபெறவுள்ள நிலையில் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் இராணுவத் தளபதி, லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை (ஓகஸ்ட் 31) பிற்பகல் சந்தித்தார்.
சிநேகபூர்வ கலந்துரையாடலின் போது இராணுவத் தளபதி, விசேட படையணியின் ஓய்வு பெறும் காலாட் படையணியின் வீரரின் அர்ப்பணிப்பு மற்றும் முன்மாதிரியான அர்ப்பணிப்பு பற்றி உயர்வாகப் பேசியதுடன், எல்ரீரீஈ பயங்கரவாதத்திலிருந்து நாட்டை பாதுகாத்த மனிதாபிமான நடவடிக்கை அம்சங்கள் பற்றிய சில நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார். .
இராணுவத் தளபதி, விசேட படையணியின் வளர்ச்சியின் பங்கு, அவர்களின் விலைமதிப்பற்ற போர்க்களம் போன்றவற்றில் ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் பங்கை பாராட்டியதுடன், அவரது எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்த இராணுவத் தளபதி, அவரது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இராணுவத் தளபதி, ஓய்வு பெறும் மேஜர் ஜெனரல் டபிள்யூடிடபிள்யூஜி இஹலகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ பீடிஎஸ்சீ அவர்களுடன் சில இன்பங்ளை பகிர்ந்து கொண்டதுடன், அவரது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடனும் ஓரிரு எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார். ஓய்வு பெறவுள்ள அதிகாரிக்கு அவர்களின் ஆதரவையும் பங்கையும் தளபதி குறிப்பிட்டதுடன், குடும்ப உறுப்பினர்கள் ஓய்வு பெறும் அதிகாரிக்கு வழங்கிய பங்களிப்பையும் பாராட்டினார்.
காலாட்படை வீரரான மேஜர் ஜெனரல் டபிள்யூடிடபிள்யூஜி இஹலகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ பீடிஎஸ்சீ அவர்களின் மூத்த மகன் இரண்டாம் லெப்டினன் மாதுருஓயா விசேட படையணி பயிற்சிப் பாடசாலையில் அடிப்படை பாடநெறியைப் பின்பற்றுகின்றமையையிட்டு இராணுவத தளபதி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இராணுவத் தளபதி, வளரும் அதிகாரிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், அவர் எதிர்காலத்தில் இராணுவத்தின் புகழ்பெற்ற இராணுவ அதிகாரியாக வருவதற்கு ஆசிர்வாதம் வழங்கினார்.
மேஜர் ஜெனரல் டபிள்யூடிடபிள்யூஜி இஹலகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ பீடிஎஸ்சீ அவர்கள் இராணுவத் தளபதியின் விருப்பத்திற்கும் பயனுள்ள வழிகாட்டுதலுக்கும் நன்றி தெரிவித்தார்.
கலந்துரையாடலின் முடிவில் லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் குடும்பத்திற்கு ஒரு சிறப்பு பரிசு மற்றும் ஓய்வு பெறும் சிரேஷ்ட அதிகாரிக்கு பாராட்டுக்கான அடையாளமாக சிறப்பு நினைவுச் சின்னத்தையும் வழங்கினார்.
ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான விவரம்
மேஜர் ஜெனரல் டபிள்யூடிடபிள்யூஜி இஹலகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ பீடிஎஸ்சீ அவர்கள் 1989 ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் பயிலிளவல் அதிகாரியாக இணைந்து கொண்டார். அவர் தியத்தலவை இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் இராணுவ அடிப்படை பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பின்னர், அவர் இரண்டாவது லெப்டினன் நிலையிக்கு நியமிக்கப்பட்டு 19 ஜனவரி 1991 அன்று விஜயபாகு காலாட் படையணியில் நியமிக்கப்பட்டார். பின்னர், சிரேஷ்ட அதிகாரி 01 பெப்ரவரி 1991 அன்று விசேட படையணிக்கு பணியமர்த்தப்பட்டார். இராணுவத்தில் அவர் பணியாற்றிய காலத்தில் அடுத்தடுத்த நிலைகளுக்கு உயர்த்தப்பட்ட பின்னர், 03 ஓகஸ்ட் 2022 அன்று மேஜர் ஜெனரலாக நிலை உயர்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேஜர் ஜெனரல் டபிள்யூடிடபிள்யூஜி இஹலகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ பீடிஎஸ்சீ அவர்கள் ஒரு அர்ப்பணிப்புள்ள காலாட்படை வீரராக செயல்பட்டு எதிரிகளிடம் தனது சிறந்த துணிச்சலை வெளிப்படுத்தியதற்காக ரண விக்கிரம பதக்கம் மற்றும் ரண சூர பதக்கம் ஆகிய பதக்கங்ளை பெற்றுக் கொண்டார்.
அவர் ஓய்வுபெறும் போது 58 வது காலாட் படைப்பிரிவின் தளபதியாகவும், விசேட படையணியின் படைத் தளபதியாகவும் பதவி வகித்துள்ளார். 1 வது விசேட படையணியின் குழு கட்டளையாளர், மீட்புக்குழுவின் கட்டளை அதிகாரி, 1 வது விசேட படையணியின் இரண்டாம் கட்டளை அதிகாரி, விசேட பிரிகேட் படையணி பிரிகேட் மேஜர், ஹைட்டியில் உள்ள ஐக்கிய நாடுகளின் ஸ்திரப்படுத்தல் பணியின் பணிநிலை அதிகாரி, 1 வது விசேட படையணியின் கட்டளை அதிகாரி, 2 வது விசேட படையணியின் கட்டளை அதிகாரி, விசேட படையணி வனப் போர் பயிற்சி பாடசாலையின் தளபதி, பயிற்சி பணிப்பகத்தில் பொதுப் பணிநிலை அதிகாரி I (உள்நாட்டு பயிற்சி), அதிகாரி தொழில் மேம்பாட்டு மையத்தில் சிரஷே்ட பயிற்றுவிப்பாளர், விசேட படையணி தலைமையகத்தின் தலைமை அதிகாரி, விசேட படையணி தலைமையகத்தின் பிரதி நிலையத் தளபதி, கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கேணல் பொதுப்பணி, ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் பாதுகாப்பு மற்றும் மூலோபாயக் கற்கைகள் பீடத்தின் தலைமை அதிகாரி, விசேட படையணி பிரிகேட் தளபதி, மார்க்ஸ் மேன்ஷிப் துப்பாக்கி சுட்டு பயிற்சி பாடசாலை மற்றும் முதலாம் படையணியின் தளபதிகள் போன்ற பதவிகளை வகித்துள்ளார்
விசேட படையணி அடிப்படைப் பாடநெறி, அடிப்படை புலனாய்வு பாடநெறி, அதிகாரிகளின் செயல்பாட்டுப் பணிநிலை பாடநெறி, இராணுவக் கட்டளை மற்றும் பதவிதாரிகள் பாடநெறி, படையலகு நிர்வாகப் பாடநெறி, போர் மீட்பு குழு பாடநெறி, பாதுகாப்பு அனர்த்த முகாமைத்துவ பாடநெறி, ஐக்கிய நாடுகளின் சிவில்-இராணுவ ஒருங்கிணைப்பு அதிகாரிகள் பாடநெறி, விளையாட்டு நிர்வாக பாடநெறி, உலகளாவிய அமைதி காக்கும் நடவடிக்கைகள் பயிற்றுவிப்பாளர் பாடநெறி, ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் நடவடிக்கை பாலின முன்னோக்குகள் பாடநெறி, விசேட படையணி,அடிப்படை பரசூட் பாடநெறி இந்தியா, காலாட்படை இளம் அதிகாரிகள் பாடநெறி – பாகிஸ்தான், தொழிலான்மை பாடநெறி – பாகிஸ்தான்,சிரேஷ்ட கட்டளை பாடநெறி, பாதுகாப்பு சேவைகள் தொழிநுட்ப பணிநிலை பாடநெறி இந்தியா, அமைதி காக்கும் நடவடிக்கைகளில் பாலினம் குறித்த பயிற்சியாளர் பாடநெறி – மலேசியா, மற்றும் பாதுகாப்பு சேவைகள் தொழில்நுட்ப பணிநிலை பாடநெறி (இராணுவம்)- இந்தியா ஆகிய பாடநெறிகளையும் பின்பற்றியுள்ளார்.
சிரேஷ்ட அதிகாரி, ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் முதுகலை அறிவியல் முகாமைத்துவ (பாதுகாப்பு ஆய்வுகள்), கொழும்பு பல்கலைக்கழகத்தில் முதுகலை மேம்பாட்டு ஆய்வுகள், இந்தியாவில் உள்ள பூலே புனே பல்கலைக்கழகத்தில் இராணுவ தொழில்நுட்பத்தில் முதுகலை பட்டம், போன்ற பல இராணுவம் அல்லாத பட்டங்களையும் பெற்றுள்ளார்.