30th August 2023 20:07:00 Hours
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் மற்றும் மீனவ மக்களின் வாழ்வாதாரத் தரத்தை மேலும் உயர்த்தவும், வருமானத்தை ஈட்டவும், முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 68 வது காலாட் படைப்பிரிவு புதன்கிழமை (ஓகஸ்ட் 23) புதுக்குடியிருப்பு மருதமடு குளத்திற்கு சுமார் 2000 நன்னீர் மீன் குஞ்சுகளை விடுவித்துள்ளனர்.
68 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ் கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் அறிவுறுத்தலின்படி 68 வது காலாட் படைப்பிரிவின் சிப்பாய்கள், கிளிநொச்சி தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஒத்துழைப்புடன் முன்னெடுத்தனர். எல்ரீரீஈ பயங்கரவாதிகளின் முன்னாள் கடற்புலிகள் இக் குளத்தை பயன்படுத்தியமை குறிப்பிடதக்கது.
681 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் என்டிபீ குணதுங்க மற்றும் 68 வது காலாட் படைப்பிரிவின் கேணல் பொதுப்பணி கேணல் ஜேஎம்டபிள்யூகே ஜயலத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ, ஆகியோர் அந்த மீன்களை விடுவிக்கும் போது உடனிருந்தனர். இந்நிகழ்வில் பல மீன்வளர்ப்பு அதிகாரிகள் மற்றும் கிராம மீனவர் சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.