30th August 2023 20:10:40 Hours
இராணுவ டேக்வாண்டோ வீரரான இலங்கை இராணுவ சேவையின் மேஜர் ஆர்பிஎன் ரத்நாயக்க அவர்கள், உலக தற்காப்புக் கலை சம்மேளனத்தின் லண்டன் 'உலக டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் -2023'ல் 40 வயதுக்கு மேற்பட்ட ஒற்றையர், இரட்டையர் மற்றும் குழுப் பிரிவுகளில் பங்கேற்று மூன்று தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.
சாம்பியன்ஷிப் போட்டியானது ஏ-2 அரினா க்ராலி லண்டனில் ஆகஸ்ட் 16-19 இல் இடம்பெற்றது, இதில் 17 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் போட்டியிட்டனர்.
மேஜர் ஆர்பிஎன் ரத்நாயக்க அவர்கள் நாட்டிலுள்ள சர்வதேச அளவிலான டேக்வாண்டோ வீரர்களில் ஒருவராவார். அவர் விளையாட்டு மற்றும் டேக்வாண்டோவின் அற்புதமான பயணத்தின் போது 30 க்கும் மேற்பட்ட நாடுகளின் வீரர்களுடன் போட்டியிட்டு அனுபவத்தைப் பெற்றுள்ளார். அவர் 2016 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை சர்வதேச இராணுவ விளையாட்டு சபையின் உலக இராணுவ டேக்வாண்டோ குழுவின் தற்போதைய தலைவராக உள்ளார்.
சர்வதேச இராணுவ விளையாட்டு சபையில் இத்தகைய கௌரவமான நியமனத்திற்காக தெரிவு செய்யப்பட்ட முதல் இலங்கை இராணுவ அதிகாரி என்ற இராணுவ வரலாற்றிலும் அவர் இணைகிறார்.
இராணுவத் தளபதியின் ஆசீர்வாதத்துடன் இராணுவ விளையாட்டு பணிப்பகம் இந்த வீரரின் பாதையை எளிதாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.