Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th August 2023 20:02:43 Hours

கிழக்கு படையினரால் போதிருக்காராம விகாரை புனரமைப்பு

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 23 வது காலாட் படைப்பிரிவினரால் 25 ஓகஸ்ட், நாலு கால்வாய் (ஹதர எல) போதிருக்காராம விகாரையின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் கேவிஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள், விகாரையின் புனரமைப்பு பணிகள் நிறைவுற்றதை உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்கேயூபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ ஐஜி அவர்களின் வழிகாட்டுதலில், 23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் கேவீஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் மேற்பார்வையின் கீழ், 7 வது இலங்கை பீரங்கி படையணியுடன் வெலிகந்த பொறியியல் சேவைகள் படையணி படையினர் இணைந்து புனரமைப்பு பணியை நிறைவு செய்தனர்.

கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் முன்னாள் தளபதி, மேஜர் ஜெனரல் எஸ்ஆர்கே ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்களினால் 2023 ஆம் ஆண்டு மார்ச் 09 ஆம் திகதி ஸ்ரீ போதிருக்காராம விஹாரையில் 'சதஹம்மந்திரய' மற்றும் சுரங்கப்பாதை அருங்காட்சியகத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பிரதேசத்தைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டனர்.