Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th August 2023 22:41:22 Hours

யக்கல ரணவிரு ஆடைத் தொழிற்சாலைக்கு பிரதி பதவி நிலைப்பிரதானி விஜயம்

இராணுவ பிரதி பதவி நிலைப்பிரதானியும், ரணவிரு ஆடைத் தொழிட்சாலை முகாமைத்துவ சபையின் தலைவருமான மேஜர் ஜெனரல் சிடி ரணசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள், யக்கல முகாம் வளாகத்தில் உள்ள ரணவிரு ஆடைத் தொழிற்சாலைக்கு தனது முதல் விஜயத்தை (ஓகஸ்ட் 15) செவ்வாய்க்கிழமை மேற்கொண்டார்.

ரணவிரு ஆடைத் தொழிற்சாலையின் தளபதி பிரிகேடியர் எம்ஜிஏஎன்பி மஹத்துவக்கார ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ, பிரதித் தளபதி பிரிகேடியர் ஏசிஜே வாசகே, ரணவிரு ஆடைத் தொழிற்சாலையின் அனைத்து சிரேஷ்ட அதிகாரிகளாலும் இராணுவ பிரதி பதவி நிலைப்பிரதானி அவர்கள் அன்புடன் வரவேற்கப்பட்டார்.

அவர் களப் பார்வையை மேற்கொள்வதற்கு முன்பு தொழிற்சாலை செயல்முறை மற்றும் அதன் அமைப்பு பற்றிய விளக்கத்தைப் பெற்றுக் கொண்டார்.

தொழிற்சாலையின் வெற்றிக்கு வழிவகுத்த ரணவிரு ஆடைத் தொழிற்சாலையின் வெவ்வேறு திறன் கொண்ட போர்வீரர்கள், தளபதி மற்றும் அனைத்து சிப்பாய்களுக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

ரணவிரு ஆடைத் தொழிற்சாலை விஜயத்தின் நினைவுச் சின்னமாக இராணுவ பிரதி பதவி நிலைப்பிரதானி அவர்கள் பார்வையாளர் பதிவேட்டுப் புத்தகத்தில் தனது எண்ணங்களை பதிவிட்டார்.