29th August 2023 22:19:35 Hours
52 வது காலாட் படைப்பிரிவின் 28வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 52 வது காலாட் படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் வைஎபிஎம் யாம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிக்காட்டலுக்கமைய தலைமையக வளாகத்தில் வியாழக்கிழமை (ஓகஸ்ட் 24) தொடர் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
இராணுவ சம்பிரதாயத்திற்கு அமைய, 52 வது காலாட் படைப்பிரிவின் தளபதிக்கு 23 வது கெமுனு ஹேவா படையணியின் படையினரால் பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. தொடர்ந்து, குழு படம் எடுக்கப்பட்டதுடன், மரக்கன்று நடும் நிகழ்வும், படையினருக்கு உரையும் நிகழ்த்தப்பட்டது.
படையினரின் உரையின் போது, 52 வது காலாட் படைப் பிரிவின் தளபதி, 52 காலாட் படைப்பிரிவின் வரலாற்றின் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளை நினைவு கூர்ந்தார் மற்றும் படையினர்களின் அர்ப்பணிப்பையும் பாராட்டினார். மேலும், படைப்பிரிவின் தளபதி, பிரதி தளபதி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் படையினர்களுடன் நிறைவு நாள் நடவடிக்கைகளின் முடிவைக் குறிக்கும் வகையில் மதிய உணவில் பங்கேற்றனர்.
மேலும், நிகழ்வுகளின் கடைசி அம்சமாக வளாகத்தில் இசை இரவு அரங்கேற்றப்பட்டது. மேஜர் ஜெனரல் வைஎபிஎம் யாம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.