Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th August 2023 22:14:41 Hours

'அயர்ன் ரைடர்ஸ்' சைக்கிள் போட்டியில் இராணுவ சைக்கிள் ஓட்ட வீரர்கள் வெற்றி

திவுலபிட்டிய, மரதகஹமுல 'அயர்ன் ரைடர்ஸ்' விளையாட்டுக் கழக ஆண்களுக்கான சைக்கிள் ஓட்டப் போட்டியில் இலங்கை இராணுவ வீரர்கள் 03, 04, 05, 06, 15 மற்றும் 17 ஆம் இடங்களை வென்றதுடன் பெண்களுக்கான சைக்கிள் ஓட்டப் போட்டியில் இராணுவ மகளிர் சைக்கிள் இராணுவ வீராங்கனைகள் 08 வது மற்றும் 10 வது இடங்களை பெற்றனர்.

இலங்கை சைக்கிள் ஓட்டுதல் சம்மேளனம் மற்றும் கம்பஹா மாவட்ட சைக்கிள் ஓட்டுதல் சங்கத்துடன் இணைந்து திவுலபிட்டிய பிரதேசத்தில் ஓகஸ்ட் 20 ஆம் திகதி இப்போட்டியை ஏற்பாடு செய்தது.

இராணுவத் தளபதி, இலங்கை இராணுவ சைக்கிள் ஓட்டுதல் குழுவின் தலைவரின் வழிகாட்டுதலின் கீழ், இராணுவ படையணிகளின் சைக்கிள் ஓட்டுநர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர். இராணுவத்தினை தவிர, கடற்படை, விமானப்படை, பொலிஸ், துறைமுக அதிகாரசபை மற்றும் தெஹிவளை - கல்கிசை மாநகரசபை போன்ற நாட்டின் புகழ்பெற்ற சைக்கிள் ஓட்டுதல் அணிகள் சைக்கிள் ஓட்டுதல் போட்டியில் கலந்துகொண்டன. இந்நிகழ்ச்சியில் சுமார் 100 சைக்கிள் ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இராணுவ சைக்கிள் ஓட்டுதல் சம்மேளனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜேஏஆர்எஸ்கே ஜயசேகர யுஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் இராணுவ சைக்கிள் ஓட்டுநர்களுக்கு பெரும் ஆதரவாகவும் ஊக்கமாகவும் இருந்தார்.