28th August 2023 22:17:53 Hours
மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சேவையாற்றும் சிவில் ஊழியர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை எழுது பொருட்கள் வழங்கும் நிகழ்வு ஓகஸ்ட் 19 மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.
மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூடபிள்யூஎச்ஆர்விஎம்என்டிகேபி நியங்கொட அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு கொழும்பு றோயல் கல்லூரி மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பழைய மாணவர்கள் “அதஹித அறக்கட்டளை”யின் ஸ்தாபகரான திரு.பிரசாத் லொகு பாலசூரிய ஆகியோரால் அனுசரணை வழங்கப்பட்டன.
இதேவேளை, மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் பாடசாலை உபகரணங்களை விநியோகித்ததன் பின்னர், அதே அனுசரணையாளர்களின் அனுசரணையுடன், புதிய துறவிகள் கற்கும் தியத்தலாவ, 'அத்ததஸ்ஸி' பிரிவெனாவிற்கு உலர் உணவுப் பொருட்களைப் பரிசாக வழங்கியதுடன், அவ்விடத்தையும் பார்வையிட்டனர்
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கு பற்றினர்.