25th August 2023 20:20:09 Hours
குருநாகல் போதனா வைத்தியசாலையில் காற்றுப் படுக்கைகள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில், 143 வது காலாட் பிரிகேட் மற்றும் 1 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியினரின் கூட்டு அனுசரணையுடன் திங்கட்கிழமை (ஓகஸ்ட் 21) வைத்தியசாலைக்கு 10 காற்றுப் படுக்கைகளை வழங்கினர்.
பிரிகேடியர் எம்எடிஎஸ் முனசிங்க (ஓய்வு) ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ, திரு.அசங்க எலிபுர, எம்எஸ் ஸ்ரீயானி சந்திரசேகர, திரு.ரொஹான் அலுத்கே, திரு.தமித் விதாரணகே, எம்எஸ்விசுதி டயஸ் அபேகுணவர்தன, திரு.சானகபிரசங்க, திரு.நெவில் பிரசன்ன, திரு. ஹசங்க துமிந்த மற்றும் சனச லைப் இன்சூரன்ஸின் திரு.ரோய் பெரேரா ஆகியோரைக் கொண்ட நன்கொடையாளர் குழுவினரால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு படுக்கைகளை வாங்குவதற்கு தங்கள் உதவிகளை வழங்கினர்.
மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் யுடி விஜேசேகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சீ அவர்கள் மற்றும் 14 வது காலாட் படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் கேஏடபிள்யூஎன்எச் பண்டாரநாயக்க யூஎஸ்பீ ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
143 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் டிஎம்எப் கிட்சிலன் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ, 143 வது காலாட் பிரிகேடின் அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் 1 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி மற்றும் குருணாகல் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சந்தன கந்தங்கமுவ மற்றும் நிகழ்வில் வைத்திய நிபுணர் சஞ்சீவ போவத்தே ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.