Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd August 2023 21:10:56 Hours

இராணுவப் போர் கல்லூரியின் பட்டமளிப்பு விழா

புத்தல இராணுவப் போர்க் கல்லூரியின் 2023 ஆம் ஆண்டின் இரண்டாவது பட்டமளிப்பு நிகழ்வு வெள்ளிக்கிழமை (11 ஓகஸ்ட்) இராணுவப் போர் கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் இராணுவப் போர் கல்லூரியின் தளபதி பிரிகேடியர் யூகேடிடிபீ உடுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

சிரேஷ்ட கட்டளைப் பாடநெறி எண்-08 அதிகாரிகள் அடங்கிய கனிஷ்ட கட்டளைப் பாடநெறி எண் 24 இன் 59 அதிகாரிகள் மற்றும் கனிஷ்ட பணிநிலை அதிகாரிகள் பாடநெறி எண் 24 இன் 24 அதிகாரிகள் உட்பட மொத்தம் 109 மாணவர் அதிகாரிகள் தங்களின் வெற்றிகரமான நிறைவுக்குப் பின் சான்றிதழ்கள் மற்றும் விருதுகளைப் பெற்றனர்.

இந்நிகழ்வில் இராணுவப் போர் கல்லூரியின் பிரதி தளபதி பிபீபீஜிகே பாலசூரிய ஆர்எஸ்பீ பீஎஸ்சி மற்றும் தலைமை பயிற்றுவிப்பாளர் பிரிகேடியர் எஸ்பீ விக்கிரமசேகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ மற்றும் ஆகியோரும் பாடநெறி பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினர். இறுதியில், இராணுவப் போர் கல்லூரியின் தளபதி முக்கிய நிரைவுரை நிகழ்த்தினார். அதிகாரிகளுக்கு சேவையில் எதிர்கால சவால்களை ஏற்றுக்கொள்வதற்கும், தொழில்முறை அதிகாரிகளாக அவர்களின் தரத்தை மேலும் உயர்த்துவதற்காகவும் கற்றலைத் தொடரவும் ஊக்கமளித்தார்.

சிறப்பான கல்வித் திறமையை வெளிப்படுத்தி ஒவ்வொரு பாடநெறியிலும் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்ற மாணவ அதிகாரிகள் பிரதம அதிதிகளிடமிருந்து விருதுகளையும் சான்றிதழ்களையும் பெற்றுக்கொண்டனர்.

தனிப்பட்ட திறன்கள் பின்வருமாறு:

சிரேஷ்ட கட்டளை பாடநெறி எண் 08

தகுதி வரிசையில் முதலாமிடம் – விசேட படையணியின் மேஜர் டிடி மாசிங்க ஆர்டபிள்யூபீ யுஎஸ்பீ பீஎஸ்சீ

தகுதி வரிசையில் இரண்டாமிடம் - இராணுவ புலனாய்வு படையணியின் மேஜர் டிஆர்எச் ஹொரதகொட யூஎஸ்பீ பீஎஸ்பீ ஐஎஸ்சீ

தகுதி வரிசையில் மூன்றாமிடம் - விஜபாகு காலாட் படையணியின் மேஜர் எஎல்டபிள்யூ திசாநாயக்க ஆர்எஸ்பீ பீஎஸ்சீ

கனிஷ்ட கட்டளை பாடநெறி எண் 24

தகுதி வரிசையில் முதலாமிடம் - இராணுவ புலனாய்வு படையணியின் மேஜர் ஏஎச்எம் கான்

தகுதி வரிசையில் இரண்டாமிடம் - விசேட படையணியின் மேஜர் பீஎம்எஸ்வை பெர்னாண்டோ

தகுதி வரிசையில் மூன்றாமிடம் - இராணுவ பொறியியல் படையணி மேஜர் எம்எஸ்எம் சேனாரத்ன

கனிஷ்ட பணி நிலை பாடநெறி எண் 24

தகுதி வரிசையில் முதலாமிடம் - இயந்திரவியல் காலாட் படையணியின் கெப்டன் டிஏஎன்எஸ்பி திப்புட்டுமுனுவ

தகுதி வரிசையில் இரண்டாமிடம் - இலங்கை இராணுவ கவச வாகனப் படையணி கெப்டன் எச்எம்எச் சேனாரத்ன

தகுதி வரிசையில் மூன்றாமிடம் – கஜபா படையணியின் கெப்டன் பீஎப்ஏஎல் பொன்சேகா