Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd August 2023 22:49:06 Hours

மடு பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு இராணுவத்தினரால் நிவாரணப் பொதிகள்

வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 54 வது காலாட் படைப்பிரிவின் 542 வது காலாட் பிரிகேட், சிங்கப்பூரின் 'வில்லிங் ஹார்ட்ஸ்' அறக்கட்டளை மற்றும் வவுனியாவில் உள்ள 'மஹாகருணா' சங்கத்தின் உறுப்பினர்களுடன் இணைந்து தகுதியான 150 மாணவர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் மற்றும் பாடசாலை உபகரணங்களை விநியோகித்துள்ளனர். மன்னார் மாவட்டத்தில் மடு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மடு தேவாலயத்தில் செவ்வாய்க்கிழமை (ஓகஸ்ட் 22) இவ் விநியோகம் இடம் பெற்றது.

வவுனியாவில் உள்ள ‘மஹாகருணா’ சங்கம் மற்றும் 542 வது காலாட் பிரிகேட்டின் ஒருங்கிணைப்புடன் சிங்கப்பூரில் உள்ள ‘வில்லிங் ஹார்ட்ஸ்’ அறக்கட்டளை வழங்கிய அனுசரணையின் மூலம் இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வின் போது, தலா ரூ. 3000/= பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் 200 குடும்பங்களுக்கும் மற்றும் 150 மாணவர்களுக்கும் அதே சந்தர்ப்பத்தில் தலா 5000/= பெறுமதியான பாடசாலை உபகரண பொதிகளும் வழங்கப்பட்டன. அதேவேளை ஒவ்வொரு மாணவருக்கும் ரூபா 2000/= காசாக வழங்கப்பட்டது.

வில்லிங் ஹார்ட்ஸ் அறக்கட்டளை மற்றும் மஹாகருணா சங்க உறுப்பினர்களுடன் 542 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் டிஎல்எம் சந்திரசேகர ஆர்டபிள்யூபீ பீஎஸ்சி அவர்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டப்ளியூ பீ ஏ டி டப்ளியூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ மற்றும் 54 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜீடபிள்யூஎ செனவிரத்ன யூஎஸ்பீ பீஎஸ்சீ ஆகியோர்களின் அறிவுறுத்தலின் பேரில் இந்த திட்டம் நடத்தப்பட்டது.

542 வது காலாட் பிரிகேட் தளபதி மற்றும் சிவில் விவகார அதிகாரி மேஜர் எம்வி பெர்னாண்டோ அவர்களின் ஒருங்கிணைப்பில் 4 வது கஜபா படையணியின் கட்டளை அதிகாரியின் வழிகாட்டுதலின் கீழ் 4 வது கஜபா படையணியின் படையினர் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் முன்னெடுத்தனர்.