20th August 2023 20:29:24 Hours
இலங்கை இராணுவ பொலிஸ் படையணி தலைமையகம், இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் சிரேஷ்ட அதிகாரவானையற்ற அதிகாரிகளுக்கான ஒரு முழு நாள் செயலமர்வு ஓகஸ்ட் 17 அன்று படையணி தலைமையகத்தில் அவர்களின் வழங்கல் கடமைகளை நிறைவேற்றுவது பற்றி செயலமர்வை முன்னெடுத்தது.
படையலகுகளுக்குள் அவர்களுக்குத் தேவையான பணிகளைச் செய்வதற்கும், குறிப்பிட்ட பாடப் பரப்பில் பரந்த அறிவை வழங்குவதற்கும், மேம்பட்ட கோட்பாட்டு அம்சங்கள் குறித்த அறிவை மேம்படுத்தும் வகையில் இந்தப் பட்டறை வடிவமைக்கப்பட்டிருந்தது.
பட்டறை பாடத்திட்டமானது படையலகு நிர்வாகம், நிர்வாகம் மற்றும் வழங்கல் நடைமுறைகள், படையணி கணக்குகள், முகாம் பாதுகாப்பு, கணக்காய்வு நடைமுறைகள் மற்றும் இராணுவ நிகழ்வுகள், விசாரணை நடைமுறைகள், சடங்கு கடமைகள் மற்றும் குற்றங்கள் பற்றிய புதுப்பிக்கப்பட்ட நடைமுறைகள் போன்றவற்றைக் கொண்டிருந்தது.
படையணி சார்ஜென் மேஜர்கள், அணிநடை பயிற்றுனர்கள், உபகரண சார்ஜென் மேஜர்கள், குழு சார்ஜென் மேஜர்கள், மற்றும் பிரிவு பொறுப்பாளர்களுடன், தற்போது இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் கீழ் கடமையாற்றும் எழுது வினைஞர்கள் உட்பட 85 க்கும் மேற்பட்ட அதிகாரவானையற்ற அதிகாரிகள் விரிவான பட்டறையில் கலந்து கொண்டனர்.
இலங்கை இராணுவத்தின் ஒழுக்க பாதுகாப்பு பணிப்பாளரும் இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏசிஏ டி சொய்சா யூஎஸ்பீ எச்டிஎம்சிஎல்எஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இச் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டதுடன், இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் நன்கு தகுதி வாய்ந்த அதிகாரிகள் விரிவுரையை நடாத்தினர்.
நாளின் இறுதியில், நிறைவுரையும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இலங்கை இராணுவத்தின் ஒழுக்க பாதுகாப்பு பணிப்பாளரும் இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏசிஏ டி சொய்சா யூஎஸ்பீ எச்டிஎம்சி எல்எஸ்சி, நிலையத் தளபதி மற்றும் ஏனைய அதிகாரிகளின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.