20th August 2023 20:26:43 Hours
மேற்கு பாதுகாப்புப் படை தலைமையகத்தின் 144 வது காலாட் பிரிகேட் அண்மையில் களனிமுல்லை 2 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணி முகாமில் சேவையாற்றுபவர்களுக்கு 'ஆரோக்கியமான மனம்' என்ற தலைப்பில் விரிவுரையை ஏற்பாடு செய்திருந்தது.
ஆரோக்கியமான மனதைப் பேணுதல் மற்றும் நம் வாழ்வில் உணர்ச்சிகளின் தாக்கத்தைப் புரிந்துகொள்வது போன்ற பல்வேறு அம்சங்களை மையமாகக் கொண்ட இச் செயலமர்வு கண்டி புனித ஜோன் எம்புலன்ஸின் தலைமை ஆணையாளரான டாக்டர் ஜேஎம் நிலாம் அவர்களால் நடத்தப்பட்டது.
டாக்டர். நிலாம் அவர்கள் இன்றைய சமூகத்தில் பகுத்தறிவு முறையில் உணர்ச்சிகளை நிர்வகிப்பதன் முக்கியத்துவத்தையும், சமச்சீர் மனநிலையுடன் வாழ்வதன் முக்கியத்துவத்தையும் எடுத்துக் காட்டினார். விரிவுரையானது குடும்பக் கருத்துக்கள் மற்றும் திருமண வாழ்க்கையின் மதிப்பை ஆராய்ந்தது மற்றும் குடும்ப அலகுக்குள் ஆரோக்கியமான உறவை வளர்ப்பது பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்கியது ஒருவரின் துணையுடன் வலுவான பிணைப்பைப் பேணுவதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டியது.
இவ் விரிவுரை மூலம், 144 வது காலாட் பிரிகேட் தனது படையினரை நிறைவான மற்றும் அர்த்தமுள்ள வாழ்க்கையை நடத்த தேவையான அறிவு மற்றும் கருவிகளுடன் சித்தப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. விரிவுரையின் போது உள்ளடக்கப்பட்ட தலைப்புகள் மன மற்றும் உணர்ச்சி நல்வாழ்வின் முக்கிய அம்சங்களையும், ஆரோக்கியமான குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டன.
இவ் விரிவுரையில் 144 வது காலாட் பிரிகேட் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் கம்பஹா புனித ஜோன்ஸ் அம்புலன்ஸ் சேவையின் மாவட்ட ஆணையாளர் திரு.ருவன் ஸ்ரீ பாலசூரிய உட்பட சுமார் 150 இராணுவ வீரர்கள் கலந்துகொண்டனர்.