20th August 2023 20:18:46 Hours
இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தலைமையகப் படைப்பிரிவின் காவலர் அறைகள், ஓய்வெடுக்கும் இடங்கள் மற்றும் பிரதான அலுவலக வளாகம் ஆகியவற்றின் நீண்டகாலத் தேவை பூர்த்தி செய்யப்பட்டதுடன், இலங்கை இராணுவத் தொண்டர் படையணி பிரதான வளாகத்தில் புதன்கிழமை (16) புதிய கட்டுமானங்கள் திறந்து வைக்கப்பட்டன.
முன்னாள் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்யூஎம்என் மானகே டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவரது தலைமையில் இலங்கை இராணுவத் தொண்டர் படையணியில் நிகழ்வுகள் நடைபெற்றன.
தொண்டர் படையலகுகள், அதன் பணியாளர்கள் மற்றும் அந்தந்த கட்டளை அதிகாரிகள் ஆகியோரின் உதவியினால், இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் பிரதித் தளபதி மேஜர் ஜெனரல் எம்டிகேஆர் சில்வா கேஎஸ்பீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
புதிய நிர்மாணங்க்ளின் திறப்பு நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.