17th August 2023 20:25:08 Hours
இலங்கை இராணுவ சமிக்ஞை படையணி -2023 இன் படையலகுகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியானது 4 வது இலங்கை இராணுவ சமிக்ஞை படையணியினால் ஏற்பாடு செய்யப்பட்டது. இலங்கை இராணுவத்தின் தலைமை சமிக்ஞை அதிகாரியின் வழிகாட்டுதலின் கீழ் அனுராதபுரம் 4 வது இலங்கை இராணுவ சமிக்ஞை படையணி கிரிக்கெட் மைதானத்தில் இலங்கை இராணுவ சமிக்ஞை படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் கேஏடபிள்யூஎஸ் ரத்நாயக்க என்டியூ அவர்களின் தலைமையில் ஆரம்பமானது.
இலங்கை இராணுவ சமிக்ஞை படையணி திறமைகள் மற்றும் திறமையான கிரிக்கெட் வீரர்களை அடையாளம் கண்டு, போட்டித்தன்மையை வெளிப்படுத்தும் வகையில், வரவிருக்கும் படையணிகளுக்கிடையிலான போட்டிகளுக்கு அவர்களை சீர்படுத்தும் நோக்கத்துடன் இந்தப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது.
போட்டியின் ஆரம்ப சுற்றுகள் 20 ஜூலை 2023 அன்று நடைபெற்றதுடன், 23 ஜூலை 2023 வரை தொடர்ந்தது. இறுதிப் போட்டி 09 ஓகஸ்ட் 2023 அன்று நடைபெற்றது.
இறுதிப்போட்டியில் 9 வது இலங்கை இராணுவ சமிக்ஞை படையணி கிரிக்கெட் அணி, 1 வது இலங்கை இராணுவ சமிக்ஞை படையணிக்கு எதிராக போட்டியிட்டு 33 ஓட்டங்களைப் பெற்று சம்பியனாகியது.
இறுதிப் போட்டியில் 9 வது இலங்கை இராணுவ சமிக்ஞை படையணி இன் கோப்ரல் எம்ஆர்என் டி சொய்சா போட்டியின் ஆட்ட நாயகனாகவும், 9 வது இலங்கை இராணுவ சமிக்ஞை படையணியின் லான்ஸ் கோப்ரல் எல்எம்பீவை பிரேமலால் சிறந்த துடுப்பாட்ட வீரராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.
9 வது இலங்கை இராணுவ சமிக்ஞை படையணியின் கோப்ரல் எஸ்பீஎஸ் உதய குமார போட்டியின் சிறந்த பந்துவீச்சாளராக தெரிவு செய்யப்பட்டார்.
4 வது இலங்கை இராணுவ சமிக்ஞை படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் ஆர்டிஆர்எம் பெர்னாண்டோ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் அழைப்பின் பேரில் இலங்கை இராணுவத்தின் பிரதான சமிக்ஞை அதிகாரியும் இலங்கை இராணுவ சமிக்ஞை படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கேஏடபிள்யூஎஸ் ரத்நாயக்க அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
இந்நிகழ்வின் போது இலங்கை சமிக்ஞைப் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், அனைத்து பணி நிலை அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் அனைத்துப் படையலகுகளின் வீரர்களும் கலந்துகொண்டனர்.