1992 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி அராலி முனையில் விடுதலைப் புலிகளின் கண்ணிவெடிக்கு இலக்காகி இலங்கை இராணுவத்தின் பல துணிச்சலான அதிகாரிகள் மற்றும் வீரர்களுடன் பலியான லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ அவர்களின் 25 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திங்கட்கிழமை (7) மற்றும் செவ்வாய்க்கிழமை (8) தொடர்ச்சியான நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்த வருடத்தின் நினைவேந்தல் நிகழ்வுகள் மற்றும் பிற தகுதிகளை மாற்றும் நிகழ்ச்சிகள் அனுராதபுரம் நகரின் மையப்பகுதியில் உள்ள டென்சில் கொப்பேகடுவ சிலையிலும் தந்திரிமலை ரஜமஹா விகாரையிலும் இடம்பெற்றது, நிகழ்வுகளில் மறைந்த லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் அவர்களின் மனைவி திருமதி லலி கொப்பேகடுவ, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மறைந்த லெப்டினன்ட் ஜெனரலின் நண்பர்கள் மற்றும் சக தோழர்கள்.கலந்து கொண்டனர்.
மறைந்த லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ அவர்களின் நினைவுகளைப் புதுப்பித்து, திங்கட்கிழமை (7) தந்திரிமலை கிராமத்தில் வறியவர்களுக்கு உலர் உணவுகளை வழங்கி, அன்னதானம், போதி பூசைகள் மற்றும் தர்ம சொற்பொழிவுகள் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன. அநுராதபுரத்தில், திருமதி லாலி கொப்பேகடுவ, இலங்கை கவச வாகனப் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே, வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா, சிரேஸ்ட அதிகாரிகள், மறைந்த லெப்டினன்ட் ஜெனரல் கொப்பேகடுவ அவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். சிலைக்கு மாலை அணிவித்து, மறைந்த போர்வீரரின் நினைவுச் சின்னத்திற்கு மரியாதை செலுத்தினர், அவர்களில் சிலர் மலர் மாலைகளை அணிவித்தனர்.
அநுராதபுரம் கலத்தேவ இலங்கை கவச வாகனப் படையணி முகாமில் இடம்பெற்ற ஏனைய ஏற்பாடுகளுக்கு மேலதிகமாக 15 பிக்குகளுக்கு தானம் வழங்கும் நிகழ்வும் செவ்வாய்க்கிழமை (8) லங்காராமய வளாகத்தில் இடம்பெற்றது.
லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ, சமகால வரலாற்றில் இதுவரை இராணுவத்தால் உருவாக்கப்பட்ட மிகச்சிறந்த போர்வீரர்களில் ஒருவரான மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன, ரியர் அட்மிரல் மொஹான் ஜயமஹா, மேலும் சில இராணுவ வீரர்கள் மற்றும் சிப்பாய்களுடன் 1992 ஆகஸ்ட் 8, காலமானார். கேணல் எச்.ஆர்.ஸ்டீபன், கேணல் ஜி.எச்.ஆரியரத்ன, கேணல் வை.என்.பலிபான, கமாண்டர் அசங்க லங்காதிலக, லெப்டினன்ட் கேணல் நளின் டி அல்விஸ், லெப்டினன்ட் கமாண்டர் சி.பி.விஜேபுரா மற்றும் சிப்பாய் டபிள்யூ.ஜே. விக்கிரமசிங்க ஆகியோர் யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை இராணுவப் பணிக்காகப் பயணம் மேற்கொண்டிருந்த போது இச்சம்பவம் இடம்பெற்றது.
லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ, திரித்துவ கல்லூரியின் பழைய மாணவர் ஆவார். அவர் 1960 மே 25 இல் இலங்கை இராணுவத்தில் இணைந்தார். இராணுவப் பயிற்சி நிலையத்தில் அடிப்படை இராணுவப் பயிற்சியின் பின்னர், அவர் மேலதிக பயிற்சிக்காக இங்கிலாந்தின் சந்தூஸ்ட் ரோயல் இராணுவ கல்லூரியில் பெற்றதுடன் 1962 ஆகஸ்ட் 3 அன்று கவச வாகனப் படையணியின் இரண்டாம் லெப்டினன்டாக நியமிக்கப்பட்டார்.