Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th August 2023 18:13:32 Hours

47 வது தேசிய விளையாட்டுப் போட்டியில் இராணுவ லான்ஸ் கோப்ரலுக்கு சிறந்த உடற்கட்டழகர் கிண்ணம்

விளையாட்டுதுறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் 47ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளின் உடற்கட்டமைப்பு நிகழ்வு, நாட்டின் பல்வேறு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி 09க்கும் மேற்பட்ட அணிகளின் பங்குபற்றுதலுடன் விளையாட்டு அமைச்சின் டங்கன் வயிட் கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை (ஓகஸ்ட் 05) இடம்பெற்றது.

இப் போட்டியில் இராணுவ உடற்கட்டழகர்கள் 02 தங்கம் மற்றும் 02 வெண்கலப் பதக்கங்களைப் பெற்றனர். இலங்கை இராணுவப் பொதுச் சேவைப் படையணியை சேர்ந்த லான்ஸ் கோப்ரல் ஜிகே மகினாராச்சி சிறந்த உடற்கட்டழகர் கிண்ணத்தை சுவீகரித்து கொண்டார்.

இராணுவ உடற்கட்டழகு மற்றும் பளுதூக்குதல் கழக தலைவரும் கிழக்கு முன்னரங்க பராமரிப்புப் பகுதியின் தளபதியுமான மேஜர் ஜெனரல் எம்டபிள்யூடிசி மெத்தானந்த யூஎஸ்பீ என்டிசி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 07 இராணுவ விளையாட்டு வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டனர்.

தனிப்பட்ட திறன்கள் வருமாறு:

சிறந்த உடற்கட்டழகர் - இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியின் லான்ஸ் கோப்ரல் ஜிகே மகினாராச்சி

80 கிலோ தங்கப் பதக்கம் - இலங்கை இராணுவப் பொதுச் சேவைப் படையணியின் லான்ஸ் கோப்ரல் ஜிகே மகின ஆராச்சி

65 கிலோ தங்கப் பதக்கம் - இலங்கை சமிக்ஞைப் படையணியின் கோப்ரல் கேகேடி திலகரத்ன

75 கிலோகிராம் வெண்கலப் பதக்கம் - இலங்கை சமிக்ஞைப் படையணியின் லான்ஸ் கோப்ரல் டபிள்யூஎம்சி அஜித் குமார

90 கிலோவுக்கும் மேற்பட்ட வெண்கலப் பதக்கம் - இலங்கை இராணுவ போர்க் கருவி படையணியின் பணிநிலை சார்ஜென் ஜிடபிள்யூஎஸ்எஸ் குமார