Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th August 2023 08:35:28 Hours

இராணுவ சேவை வனிதையரின் மாதாந்த கூட்டம் இராணுவ தலைமையகத்தில்

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் மாதாந்த கூட்டம் இராணுவ தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை (ஓகஸ்ட் 04) இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே தலைமையில், சேவை வனிதையர் பிரிவு கிளைகளின் தலைவிகள் மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்களின் பங்குபற்றளுடன் நடைபெற்றது.

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி அவர்கள் தொடக்கவுரையாற்றியதுடன், நிறைவேற்றுச் செயலாளர் மேஜர் எச்எஸ் வன்னியாராச்சி அவர்கள் கடந்த கூட்டத்தின் அறிக்கையை வாசித்தார். பின்னர் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்களால் புதிய செயற்குழு நியமிக்கப்பட்டதுடன், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் பொருளாளர் மேஜர் பீஜிபீசீ குமாரி அவர்களினால் பாதிடு மற்றும் கணக்கு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டது.

அன்றைய சிறப்பு நிகழ்வாக, விருந்தினர் போச்சாளரான திரு. தனுஜ சந்திரசேகர வாழை நார்களால் தயாரிக்கப்படும் பொருட்கள் பற்றிய மதிப்புமிக்க செயலமர்வை நடத்தினார். இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே 'ரணவிரு' யோகட் தயாரிப்பு திட்டத்திற்கான நிதியுதவியை வறுமானத்தினை இராணுவ சேவைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி துஷாரி வணிகசேகர மற்றும் இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி குழுவின் தலைவி திருமதி ஷியாமலி விஜேசேகர ஆகியோருக்கு வழங்கினார்.

தேநீர் விருந்துபசாரத்தின் போது உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் கலந்துரையாடியதுடன், இறுதியில் குழுப் படங்களும் எடுத்துக் கொண்டனர்.