05th August 2023 06:31:34 Hours
இலங்கை சிங்க படையணி அதிகாரிகள் பயிற்சி தினம் நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகளின் பங்கேற்புடன் வெள்ளிக்கிழமை (ஜூலை 28) அம்பேபுஸ்ஸ இலங்கை சிங்க படையணி தலைமையகத்தில் நடைபெற்றது.
பயிற்சி நாளில் விரிவுரைகள், பொழுதுபோக்குகள் போன்றவை இடம்பெற்றதுடன் அதைத் தொடர்ந்து படையணி அதிகாரிகளின் உணவகத்தில் 'டின்னர்ஸ் கிளப்' நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் கலாநிதி சனத் டி சில்வா ஆகியோர் அதிதிகளாகப் பங்குபற்றினர். 'டைனர்ஸ் கிளப்' நிகழ்வின் போது, விருந்தினர் பேச்சாளர்கள், "இந்தியப் பெருங்கடலில் வளர்ந்து வரும் மூலோபாய போட்டி" மற்றும் 'இலங்கை பாரம்பரியத்தின் வரலாறு' என்ற தலைப்பில் அதிகாரிகளுக்கு விளக்கமளித்தனர்.
இராணுவத்தின் உபகரண கட்டுப்பாட்டாளரும் இலங்கை சிங்க படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜிஆர்ஆர்பீ ஜயவர்தன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, இலங்கை சிங்க படையணியின் நிலையத் தளபதி பிரிகேடியர் சிஎஸ் திப்போட்டுகே ஆகியோர் இணைந்து விருந்தினர் பேச்சாளர்களுக்கு பாராட்டுக்கான அடையாளமாக நினைவு பரிசுகளை வழங்கினர்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், பணிநிலை அதிகாரிகள் மற்றும் இலங்கை சிங்க படையணியின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.