04th August 2023 10:20:21 Hours
இலங்கையின் கிழக்குப் பகுதியில் அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் திருகோணமலை மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளின் நடவடிக்கை மேற்பார்வையிடுவதும், பாதுகாப்பைப் பேணுவதும் கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பொறுப்பாகும். அது மட்டுமல்லாது கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் சிவில்-இராணுவ உறவுகளை மேலும் மேம்படுத்தும் சமூகம் சார்ந்த பல திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
அவசர உதவி வழங்குதல், மனிதாபிமான நிவாரணத் திட்டங்கள், உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் நடமாடும் மருத்துவ முகாம்களை நடத்துதல், போன்வை முக்கிய திட்டங்களாகும் கிழக்கு மாகாணத்தில் வீடற்றவர்களுக்கான புதிய வீடுகளை நிர்மாணிப்பதும் பெரும்பாலும் படையினர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக படையினரின் தொழில்நுட்ப நிபுணத்துவத்திற்கமைய 2009 ஆம் ஆண்டிலிருந்து போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு 317 புதிய வீடுகளை நிர்மாணித்து பின்தங்கிய மக்களுக்கு வழங்கியுள்ளனர்.
அனுசரனையாளர்களின் உதவியுடன், சமயத் தலைவர்கள் மற்றும் லயன் கழகங்கத்தின் ஒருங்கிணைப்புடன் இராணுவத்தால் இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த மனிதாபிமான முயற்சியானது, பொருளாதார சிரமங்களுக்கு உள்ளான பல குடும்பங்களின் கண்ணீரை துடைத்ததுள்ளது.
இந்த ஆண்டு வரை, கிழக்குப் படையினர் தங்களின் தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் மனிதவளத்தில் 317 வீடுகளை நிர்மாணித்து, அவற்றை ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கியுள்ளனர். தற்சமயம், கிழக்குக் தளபதி, கிழக்குப் பாதுகாப்புப் படை தலைமையகத்தின் கீழ் கடமையாற்றும் படைப் பிரிவு தளபதிகள், பிரிகேட் தளபதிகள் ஆகியோரின் வழிகாட்டல் மற்றும் தன்னலமற்ற முயற்சியின் கீழ் மேலும் 03 ஏழைகளுக்கான புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அந்த புதிய வீடுகள் நிர்மாணித்து முடிக்கப்பட்டதும், படையினரால் தளபாடங்கள், மின்சாரம், நீர், இலத்திரனியல் உபகரணங்கள், அத்தியாவசியப் பொருட்கள் போன்றவற்றை வழங்குவதற்கும், சுற்றுச்சூழலை பசுமையாக்குவதற்கு மரக்கன்றுகளை நடுவதற்கும் உறுதுணையாக இருப்பர்.
அதுமட்டுமல்லாமல், கைவிடப்பட்ட வயல்கள் மற்றும் சேனை பயிர்ச்செய்கைகளுக்கு நீர், விதைகள், அமைத்தல், நீர்ப்பாசனம் போன்றவற்றின் மூலம் இராணுவத்தினரால் தங்கள் தொழில்நுட்ப ஆதரவை விரிவுபடுத்தும் நடைமுறையில் உள்ளனர்.
நாட்டில் நல்லிணக்கம், மற்றும் அமைதியான சூழலை உருவாக்கும் வகையில் கிழக்குப் பிராந்தியத்தில் வறுமையில் வாடும் மக்களுக்கு நல்ல நாளை உருவாக்கித் தர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள இராணுவத்தினர் கிழக்கில் உள்ள மக்களுக்கு உதவும் வகையில் 24 மணி நேரமும் பணியில் உள்ளனர்.