26th July 2023 19:49:51 Hours
கிழக்கு முன்னரங்கு பராமரிப்பு தலைமையகத்தில் பணியாற்றும் படையினருக்கு மின்னேரியாவில் உள்ள 3 வது பொறியியல் சேவைப் படையணியில் 'தர்ம' சொற்பொழிவு செவ்வாய்க்கிழமை (ஜூலை 18) ஏற்பாடு செய்யப்பட்டது.
இராணுவ உறுப்பினர்களின் மனநலம் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் கிழக்கு முன்னரங்கு பராமரிப்பு பிரதேசத்தின் படையினருக்கான சொற்பொழிவு வண.ராஜகீய பண்டித பலாங்கொட ரத தேரோவினால் வழங்கப்பட்டது. கிழக்கு முன்னரங்கு பராமரிப்பு பிரதேசத்தின் தளபதி மேஜர் ஜெனரல் எம்டபிள்யூடிசி மெத்தானந்த யூஎஸ்பீ என்டிசி அவர்களின் வழிகாட்டுதல்களுக்கமைய கிழக்கு முன்னரங்கு பராமரிப்பு பிரிவு மற்றும் அதனுடன் இணைந்த படையலகுகளின் கீழ் உள்ள படையினர்கள் இந்த சொற்பொழிவில் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட பணி நிலை அதிகாரிகள் படையலகு கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் கலந்து கொண்டனர்.