Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th July 2023 19:44:40 Hours

மாரவில போட்டியில் இராணுவ எல்லே வீரர்கள் பிரகாசிப்பு

மைக்கல் வாஸ் மற்றும் ஹனி தமல் எல்லே போட்டி -2023 இல் இலங்கை இராணுவ எல்லே அணியின் வீரர்கள், மாரவில பாருதல்பொத கிறிஸ்ட் கிங் விளையாட்டு கழக எல்லே அணியுடன் மோதி 12 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றனர். இப்போட்டிகள் தொடுவாவ கோல்டன் பீச் ஸ்போர்ட்ஸ் கிளப் விளையாட்டு மைதானத்தில் ஜூலை 8 முதல் 16 வரை நடைபெற்றது.

இந்த போட்டியில் இலங்கை இராணுவம் எல்லே அணி உட்பட 16 அணிகள் பங்கேற்றதுடன் இலங்கை இராணுவ எல்லே அணி அரையிறுதியில் வதுரம்ப புனித அன்னாள் விளையாட்டுக் கழக எல்லே அணியை தோற்கடித்து தமது திறமையை வெளிப்படுத்தியது.

இறுதிப் போட்டியின் போது, பாருதல்பொத கிறிஸ்ட் கிங் விளையாட்டு கழக அணி சவாலான முயற்சியை மேற்கொண்ட போதிலும், நான்கு ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது. இதன்படி, எல்லே போட்டியின் சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருதை இலங்கை இராணுவ சேவைப் படையணியின் கோப்ரல் டபிள்யூஏடி அவிஷ்க பெற்று கொண்டார். எல்லே போட்டியின் சிறந்த ஓட்ட வீரராக இலங்கை இராணுவ சேவைப் படையணியைச் சேர்ந்த சிப்பாய் கேஏஎல் மதுஷங்க தெரிவு செய்யப்பட்டார்.

போட்டியின் சிறந்த வீரராக இலங்கை இராணுவ சமிக்ஞைப் படையணியின் லான்ஸ் கோப்ரல் பீடிஎன் சம்பத் தெரிவு செய்யபட்டதோடு, இறுதிப் போட்டியில் சிறந்த துடுப்பாட்ட வீரராக இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் சிப்பாய் கேஎஆர்பீகே பெரேரா தெரிவு செய்யப்பட்டார்.

இறுதிப் போட்டியில் இலங்கை இராணுவ எல்லே அணி வெற்றியை தனதாக்கி கொண்டது. அவர்களின் சிறந்த குழுப்பணி, அர்ப்பணிப்பு மற்றும் பயிற்சிக்கு இது சான்றாகும் என்பது குறிப்பிடதக்கதாகும்.