Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th July 2023 16:38:48 Hours

பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு பூப்பந்து போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கு சுற்றுலா

அண்மையில் நடைப்பெற்ற 12 வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு பூப்பந்து போட்டி-2023 ல் வெற்றியீட்டிய இலங்கை இராணுவ பூப்பந்து குழு உறுப்பினர்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் பரிந்துரைக்கமைய அவர்களின் எதிர்கால போட்டிகளுக்கு அவர்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில் மூன்று நாள் (ஜூலை 17-19) சுற்றுலா ஒன்றினை மேற்கொண்டனர்.

2018ம் ஆண்டிற்கு பின் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் இருவரும் பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு பூப்பந்து போட்டிகளில் தமது திறமையினை காண்பித்து வெற்றியீட்டி உள்ளனர்.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் போட்டியாளர்களின் சாதனை வெற்றிக்கு மகிழ்வடைந்து 24 வது காலாட் படைப்பிரிவின் தளபதியும் இராணுவ பூப்பந்து குழுவின் தலைவருமான மேஜர் ஜெனரல் டபிள்யூ. சந்திரசிறி ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சி அவர்களுக்கு வழங்கிய வழிகாட்டலுக்கமைய விளையாட்டு பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் பீஏஎம் பீரிஸ் ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சி அவர்களுடன் இணைந்து விளையாட்டு வீரர்களின் தினசரி வேலைபளுவில் இருந்து விலகி உத்வேகம், ஓய்வு மற்றும் மகிழ்ச்சியான சுற்றுலா பயணத்தினை மேற்கொண்டனர்.

அதன்படி, அம்பாறை பிரதேசத்தில் உள்ள குறிப்பிடத்தக்க வரலாற்று இடங்கள் மற்றும் சுற்றுலாத்தலங்களை பார்வையிட்டதன் பின்னர் பாசிக்குடா மற்றும் அருகம்பே கடற்கரையினை பார்வையிட்டனர். பொத்துவில் முஹுது மஹா விகாரை, அம்பாறை தீகவாபி விகாரை மற்றும் இறுதியாக கண்டி ஸ்ரீ தலதா மாளிகை உள்ளிட்ட பல புராதன வழிபாட்டுத் தலங்களுக்கும் சென்று ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டனர். இராணுவ பூப்பந்தாட்டக் குழுவின் தலைவர் மற்றும் விளையாட்டுப் பணிப்பாளர் ஆகியோரின் ஒருங்கிணைப்பின் ஊடாக அனைத்து ஏற்பாடுகளும் இடம்பெற்றிருந்தன.

கிழக்கு விஜயத்தின் போது, அவர்கள் பீரங்கி படையணி பாடசாலை, 23 மற்றும் 24 வது காலாட் படைபிரிவு தலைமையகங்களையும் பார்வையிட்டனர்.