25th July 2023 21:03:03 Hours
யாழ், குருநகர் பொதுப் பகுதியில் உள்ள உள்ளூர் நன்கொடையாளர்களின் உதவியால், யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 51 வது காலாட் படைப்பிரிவின் 512 வது காலாட் பிரிகேடின் 17 வது கெமுனு ஹேவா படையணியின் படையினர், வியாழன் (20 ஜூலை) குருநகர் மேற்கு சனசமூக நிலைய பாலர் பாடசாலையில் உள்ள பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கினர்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக 512 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எல்ஜிஜேஎன் ஆரியதிலக்க ஆர்எஸ்பீ அவர்கள் கலந்து கொண்டு இந்த பாலர் பாடசாலையின் 60 பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்களை வழங்கி வைத்தார்.
512 வது காலாட் பிரிகேட் பகுதியில் பணியாற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு தேவையான கற்றல் உபகரணம் குறைவாக இருப்பதைக் கண்டறிந்த படையினர் பிள்ளைகளுக்கு அந்த அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக அனுசரணையாளரை தேட முடிவு செய்தனர்.
படையினரின் முயற்சிக்கு சாதகமாகப் பதிலளித்த பல நன்கொடையாளர்கள் அப்பகுதியில் ஒன்றுசேர்ந்து, பல்வேறு புத்தகங்கள், பென்சில்கள், கலர் பென்சில்கள் போன்றவற்றை உள்ளடக்கிய அந்த உபகரணங்களை கொள்வனவு செய்ய உதவினர்.
17 வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி, அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் நிகழ்வில் பங்கேற்றினர்.