Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th July 2023 18:43:25 Hours

படையினரால் யடகல விகாரை வளாகம் சுத்தம்

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 61 வது காலாட் படைப்பிரிவின் 613 காலாட் பிரிகேட் படையினரால், காலி உனவட்டுனவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க 'யடகல' விகாரை வளாகத்தில் 'சிரமதான' பணி வியாழக்கிழமை (20) முன்னெடுக்கப்பட்டது.

இப் பணியின் போது ஆலயத்திற்கு வரும் யாத்திரிகள் மற்றும் பக்தர்களால் விட்டுச் சென்ற அனைத்து மாசுக்கள், பிளாஸ்டிக் கழிவுகள், உலர்ந்த இலைகள் மற்றும் குப்பைகளை படையினர் சேகரித்து சுத்தப்படுத்தினர்.

613 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் கேவிஐஎல் ஜயவீர யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலுக்கமைய 613 வது காலாட் பிரிகேடின் 2வது (தொ) கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரியால் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், விகாரையின் பிக்குகளின் ஆசிகளும் பெறப்பட்டன.