24th July 2023 18:12:43 Hours
1996 ஜூலை 18-25 காலப்பகுதியில் ‘முல்லைத்தீவு -1996’ போரில் உயிர் தியாகம் செய்த 44 அதிகாரிகள் மற்றும் 1125 சிப்பாய்களின் நினைவுகள் புத்துயிர் அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது, முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்திலுள்ள போர்வீரர் நினைவுச் சின்னத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி எம்கே ஜயவர்தன ஆர்எஸ்பீ விஎஸ்வி யுஎஸ்பீ என்டியு அவர்கள் கலந்து கொண்டார்.
நினைவு தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்த அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் அணிவகுத்து நிற்கும் முன், மதக வஸ்திரம் (நினைவூட்டல்) சடங்குகளை 'மகா சங்கத்தினர்' நடாத்தினர். முதலில், முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்கே ஜயவர்தன ஆர்எஸ்பீ விஎஸ்வி யுஎஸ்பீ என்டியு அவர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 59 வது காலாட் படைப்பிரிவின் 591 வது காலாட் பிரிகேட் படையினர் முல்லைத்தீவு போரில் வீரமரணம் அடைந்த போர்வீரர்களை நினைவுகூரும் பொருட்டு இரவு முழுவதும் 'பிரித்' பாராயணம் மற்றும் (ஜூலை 19) காலை அன்னதானமும் ஏற்பாடு செய்தனர். முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியின் வழிகாட்டுதலின்59 வது காலாட் படைப்பிரிவின் தளபதி 591 வது காலாட் பிரிகேட் தளபதி ஆகியோரினால் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இரண்டு நினைவு நிகழ்வுகளிலும் கலந்துகொண்டனர்.
1995 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலும் 1996 ஆம் ஆண்டின் முற்பகுதியிலும் யாழ் குடாநாட்டின் கட்டுப்பாட்டை இழந்த புலிப் பயங்கரவாதிகள், யாழ் குடாநாட்டில் ஏற்பட்ட அவமானகரமான தோல்வியை எதிர்கொள்ள முடியாமல் வன்னிக்காடுகளுக்குப் பின்வாங்கத் தொடங்கினர். அவர்களது ஆயுதக் களஞ்சியத்தின் பெரும்பகுதியைச் சேமித்து, கிளிநொச்சியின் மையப் பகுதியில் தமது பயங்கரவாதத் தலைமையகத்தை நிறுவுவதற்கு முன்னர், முல்லைத்தீவின் மையப் பகுதியில் உள்ள இராணுவப் படையினருக்கு எதிராக கடுமையான தாக்குதலை முன்னெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.