Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th July 2023 20:07:41 Hours

‘தீகவாபிய’ விகாரை புணரமைப்பின் 2 வது கட்டம் ஆரம்பம்

பௌத்த நாட்காட்டியின் பதினாறு புனித வழிபாட்டுத் தலங்களில் ஒன்றான அம்பாறை 'தீகவாபிய' தாதுகோபத்தின் ஆரம்ப புனரமைப்புத் திட்டம் 69 அடிகள் நிறைவடைந்த நிலையில் 2 வது கட்ட புனரமைப்புத் திட்டம் திங்கட்கிழமை (ஜூலை 10) ஆரம்பிக்கப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன டபிள்யூடபிள்யூ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சி எம்பீல், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ் ஆர்எஸ்பீ இரண்டு பார்கள், வீஎஸ்வீ யூஎஸ்பீ எஸ் எம்எஸ்சீ எம்ஓஏ அமெரிக்கா, எம்எஸ்சீ (பாதுகாப்பு கற்கை), ஐஎஸ்மற்றும் முதுமானி பிரித்தானியா, , பிஎஸ்சீ (பாதுகாப்பு கற்கை), எம்ஐஎம் இலங்கை, ஏஎம்ஐஈ இலங்கை, ஆர்சீடிஎஸ், பீஎஸ்சீ, மற்றும் சிறப்பு விருந்தினர்களின் மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் 2 வது கட்ட மறுசீரமைப்புக்கான அடிக்கற்கள் நாட்டப்பட்டன.

இலங்கை இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள உறுப்பினர்கள் 268 அடி உயரம் கொண்ட ‘தீகவாபிய’ விகாரை 2020 இல் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கியதிலிருந்து தொல்பொருள் திணைக்களத்தின் சிரேஷ்ட தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் ஆலோசனையில் 'தீகவாபிய அறக்கட்டளை நிதியின் ஊடாக அதன் புனரமைப்பு மற்றும் மறுசீரமைப்புக்கான ஆதாரங்களை வழங்குகிறதுடன் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

விருந்தினர்கள், விகாரையின் பொறுப்பாளர் வண. மஹாஓய சோபித தேரர் மற்றும் பிக்குகளிடம் தற்போது நடைபெற்று வரும் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தனர்.

அழைப்பாளர்கள் 2 வது கட்ட மறுசீரமைப்புத் திட்டத்தின் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முன் புத்தர் சந்நிதானம், யாத்திரீர்கள் ஓய்வு அறை மற்றும் துறவிகள் வாசஸ்தலம் ஆகியவற்றின் தற்போதைய கட்டுமானப் பணிகளை பார்வையிட்டனர்.

இராணுவ பொறியியல் சேவைகள் படையணி மற்றும் 8 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையினர், சகோதர சேவைகள் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களப் பணியாளர்களின் உதவியுடன் ஒட்டுமொத்த கட்டுமானப் பணிகளை மேற்கொள்கின்றனர். அம்பாறையிலிருந்து செல்லும் வழியில், செங்கமுவா, பொத்துவில் நீலகிரி பாகொட விகாரைக்கு வருகை தந்த பிரதிநிதிகள், இலங்கை விமானப்படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விகாரையின் நிர்மாணப் பணிகள் குறித்தும் கேட்டறிந்தனர்.

கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் யூடி விஜேசேகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சீ, விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ் ஆர்எஸ்பீ இரண்டு பார்கள், வீஎஸ்வீ யூஎஸ்பீ எஸ் எம்எஸ்சீ எம்ஓஏ அமெரிக்கா, எம்எஸ்சீ (பாதுகாப்பு கற்கை), ஐஎஸ்மற்றும் முதுமானி பிரித்தானியா, , பிஎஸ்சீ (பாதுகாப்பு கற்கை), எம்ஐஎம் இலங்கை, ஏஎம்ஐஈ இலங்கை, ஆர்சீடிஎஸ், பீஎஸ்சீ, இலங்கை விமானப்படையின் கட்டுமானப் பொறியியல் படை பணிப்பாளர் நாயகம், 22, 23 மற்றும் 24 வது காலாட் படைப்பிரிவுகளின் தளபதிகள், அம்பாறை பிரதிப் பொலிஸ் மா அதிபர், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் ஆகியோரும் அன்றைய நிகழ்ச்சி கலந்து கொண்டனர்.