07th July 2023 21:00:43 Hours
கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 23 வது காலாட் படைப்பிரிவின் 233 வது காலாட் பிரிகேடின் மேற்பார்வையின் கீழ் 9 வது இலங்கை கள பீரங்கிப் படையணி படையினர் சிங்கபுர ஸ்ரீ கெமுனு விகாரையின் விகாராதிபதி வண.திக்கெல்லே ஞானபிர தீப லங்கார நாயக்க தேரரின் வேண்டுகோளுக்கிணங்க 'சங்கவாசய' என்ற குடியிருப்புக் கட்டிடத்தை நிர்மாணித்து ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 02) நடைப்பெற்ற நிகழ்வில் கையளித்தனர்.
கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் யுடி விஜேசேகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சி அவர்கள் பணியின் நிறைவைத் துறவிக்கு அறிவித்தார். இத் திட்டம் 'அதஹித' மனிதாபிமான திட்டத்தின் திரு.பிரசாத் லொகுபாலசூரியவின் ஒருங்கிணைப்பின் மூலம் ரோயல் கல்லூரியின் பழைய மாணவரான திரு.சிந்தக அபேசேகர மற்றும் விசாக கல்லூரியின் பழைய மாணவி திருமதி தேஜா கபுருகே ஆகியோரின் அனுசரணையில் நடைபெற்றது.
இத் திட்டத்திற்கு அனுசரணையாளர்கள் 167,200.00 ரூபாய் நிதியுதவி வழங்கியதுடன், திறப்பு விழாவின் போது திரு.பிரசாத் லொகுபாலசூரிய மற்றும் நன்கொடையாளர்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் 233 வது காலாட் பிரிகேட் தளபதி, 9 வது இலங்கை கள பீரங்கி படையணியின் கட்டளை அதிகாரி மற்றும் படையணியின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.