Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th July 2023 21:51:27 Hours

கோகிலாய் மாணவர்களுக்கு குடிநீர் தாங்கிகள் மற்றும் பாடசாலை பொருட்கள் அன்பளிப்பு

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு கொழும்பு அனுசரணையாளர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் குழுவினால் வழங்கப்பட்ட ஒருங்கிணைந்த அனுசரணையில் எசல பௌர்ணமி தினத்தன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 03) கோகிளாய் 'ஸ்ரீ சம்போதி விஹாரையில்' 'விஸ்வ பௌத்தலோக' அறநெறி பாடசாலை மாணவர்களுக்கும் 'சிங்கித்தீ திவிஹுரு' பாலர் பாடசாலையின் சிறுவர்களுக்கும் ஐந்து குடிநீர் தாங்கிகள், புத்தகங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன.

திரு பிரசாத் லொகுபாலசூரிய மற்றும் கொழும்பு றோயல் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் 'அதஹித' அமைப்பின் நண்பர்கள் மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் முன்னாள் பட்டதாரி மாணவர்களும், வெளிநாட்டு இலங்கையர்களின் ஆதரவுடன் இணைந்து 2000 லீட்டர் கொள்ளளவு கொண்ட ஐந்து நீர் தாங்கிகளுக்கான நிதியுதவியை வழங்கினர்.

இச் சமூகம் சார்ந்த திட்டத்தின் விநியோக நிகழ்ச்சி 19 வது கெமுனு ஹேவா படையினர் மற்றும் 5 வது (தொ) இலங்கை சிங்கப் படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந் நிகழ்வில் வண. ஸ்ரீ திஸ்ஸபுர குணரத்ன தேரர், முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்கே ஜயவர்தன ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டியூ, இலங்கை பொறியியல் சேவை வனிதையர் கிளையின் தலைவி திருமதி ஷம்மி ஜயவர்தன, 593 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எஸ்டிபீசி ஆராச்சிகே மற்றும் 591 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் எஸ்என்எம்ஏவி அரம்பேபொல ஆர்டபிள்பீ, மற்றும் பிரதேசத்தில் சேவையாற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.