Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th July 2023 20:30:54 Hours

144 காலாட்படை பிரிகேட் படையினர் டெங்கு கட்டுப்பாட்டு திட்டத்தில் இணைவு

மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 144 காலாட் பிரிகேட்டின் 2 (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் ஒரு அதிகாரி மற்றும் பத்து சிப்பாய்கள் மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி வழங்கிய வழிகாட்டுதல்களின் அடிப்படையில் சனிக்கிழமை (2023 ஜூலை 1,) முன்னெடுக்கப்பட்ட தேசிய டெங்கு ஒழிப்பு திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கினர்.

அதன்படி, படையினர் தொடங்கஹஹேன, 505 – சி கொட்டிகாவத்தை கிராம அலுவலர் பிரிவு, கொலன்னாவ அபிவிருத்திக் குழு, முல்லேரியா பிரதேச சபை, கொலன்னாவ பிரதேச செயலகம், கொலன்னாவ பொலிஸ் நிலையம் மற்றும் கொலன்னாவ சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரிகளுடன் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு மருத்துவ அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் அறிவுரை வழங்கினர்.

பொது மக்களின் நலன்களுக்காக முன்னெடுக்கப்பட்ட இந்த சமூக திட்டத்திற்கு இராணுவத்தின் பங்களிப்பை 144 வது காலாட் பிரிகேட் தளபதி மற்றும் 2 (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணி கட்டளை அதிகாரி ஆகியோர் உன்னிப்பாகக் கண்காணித்தனர்.