Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th July 2023 20:24:12 Hours

இலங்கை பீரங்கி படையின் 15 வது ட்ரோன் படையினரால் விகாரை கட்டடம் புனரமைப்பு

மீகொட வட்டரெக்க 'ஸ்ரீ புண்யலோக' விகாரையின் விகாராதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 14 வது காலாட் படைபிரிவின் 142 வது காலாட் பிரிகேட்டின் இலங்கை பீரங்கி படையணியின் 15 வது ட்ரோன் படையினர் சமூக நலத்திட்டமாக தான மண்டபத்தை ('தான ஷாலா') புனரமைத்தனர்.

14 வது காலாட் படைபிரிவின் தளபதி மற்றும் 142 வது காலாட் பிரிகேட் தளபதி ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் இலங்கை பீரங்கி படையணியின் 15 வது ட்ரோன் படையின் கட்டளை அதிகாரியின் மேற்பார்வையில் 2023 ஜூன் 21 முதல் 30 வரை இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

அதற்கிணங்க படையினர் விகாரையின் முழு தான மண்டபத்தையும் புனரமைத்து வர்ணம் பூசி அழகுபடுத்தினர். திட்டத்தின் முடிவில், படையினர் 'போதிய' மற்றும் விகாரையின் சுற்றுப்புறங்களையும் சுத்தம் செய்தனர்.