Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th July 2023 20:45:59 Hours

மேற்கு படையினர் ஹோமாகம அன்னதானத்திற்கு உபகரணங்கள் மற்றும் மனிதவள உதவி

மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் படையினர் தற்காலிக குடில்கள் மற்றும் இராணுவ சமையல்காரர்களை வழங்கி பௌர்ணமி தினத்தன்று (ஜூலை 3) ஹோமாகம மாவதகம கல்லூரி மைதான அன்னதானம் வழங்குவற்கான உதவிகளை செய்தனர்.

மாவத்கம தருண கெல’ அமைப்பு கே டி கட்டுமானம் நிறுவனத்துடன் இணைந்து அன்னதானத்தை ஏற்பாடு செய்திருந்தது. உணவின் பின்னர் ஐஸ்கிறீமும் வழங்கப்பட்டது.

பௌத்த நாட்காட்டியின் பல முக்கிய நிகழ்வுகளை நினைவுகூரும் இந்த ஆடி எசல போயா’ நாளில் மாலை வரை 10,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மேற்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி இத் திட்டத்திற்கு தனது ஆசிகளை வழங்கினார்.