04th July 2023 19:35:42 Hours
64 வது காலாட் படைபிரிவின் படையினர் சேவையாற்றும் பிரதேசங்களில் உள்ள சிவில் விளையாட்டுக் கழகங்களுக்கிடையில் ஏற்பாடு செய்யப்பட்ட கரப்பந்து போட்டியின் இறுதிப்போட்டி 2023 ஜூன் 29 முத்துஐயன்கட்டு பாரதி விளையாட்டு மைதானத்தில் 1900 மணியளவில் இரவு நிகழ்வாக நடைபெற்றது.
இந் நிகழ்வின் பிரதம அதிதியாக 64 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்டபிள்யூகேஎன் ஈரியகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் கலந்து கொண்டு போட்டியை பார்வையிட்டார்.
இப் போட்டியில் 08 கரபந்தாட்ட விளையாட்டுக் கழகங்களை தோற்கடித்து ஒட்டுசுட்டான் ஈஸ்வரன் கரபந்தாட்ட விளையாட்டுக் கழகம் சாம்பியனாகவும் முத்துஐயன்கட்டுக்குளம் கரப்பந்தாட்ட விளையாட்டுக் கழகத்தில் இரண்டாம் இடத்தைப் பிடித்தன.
வெற்றியாளர்கள், இரண்டாம் இடம் பெற்றவர்கள் மற்றும் அனைத்து வீரர்களும் தங்களுக்குரிய கிண்ணங்கள், பண விருதுகள் மற்றும் பங்கேற்பு சான்றிதழ்களை நிகழ்வில் பிரதம அதிதியிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.