30th June 2023 21:30:59 Hours
யாழ். எழுத்துமட்டுவாழ் வடக்கில் அமைந்துள்ள ஸ்ரீ ஞானதுர்க்கை அம்மன் கோவிலின் வருடாந்த ஆலய உற்சவம் நடைபெறுவதற்கு சில தினங்களுக்கு முன்னர் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழுள்ள 52 வது காலாட் படைப்பிரிவு படையினர் வியாழக்கிழமை (29) காலை ஆலய வளாகத்தைச் சுத்தம் செய்தனர்.
52 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் வை ஏ பி எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின்படி பொதுமக்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நிலவும் நல்லெண்ணம் மற்றும் நல்லிணக்கத்தை அடையாளப்படுத்தும் முகமாக இந் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
ஜூலை மாத தொடக்கத்தில் கோவில் திருவிழா நடைபெற உள்ளதுடன் 25 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் துப்புரவு திட்டத்தில் கலந்துகொண்டனர்.