30th June 2023 21:38:23 Hours
யாழ். பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஆர்கே ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ வழங்கிய வழிகாட்டுதலுக்கிணங்க பருத்தித்துறையைச் தளமாக கொண்டுள்ள 250க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் மற்றும் உள்ளூர்வாசிகள் புதன்கிழமை (28) சத்கோட்டை மற்றும் ஊரணி கடற்கரையில் குப்பைகளை அகற்றும் சமூக பணியினை மேற்கொண்டனர்.
சுற்றுச்சூழலுக்கு ஆபத்தையும் சுகாதார அபாயத்தையும் விளைவிக்கும் வகையில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகளால் வீசப்பட்டிருந்த பெலித்தீன், பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் ஏனைய குப்பைகளை அப்பகுதியில் இருந்து அப்புரப்படுத்தினர்.
பருத்தித்துறை பிரதேச செயலாளர் அலுவலகம் மற்றும் பருத்தித்துறை பிரதேச சபையின் ஒத்துழைப்புடன் இந்த துப்புரவு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பருத்தித்துறை நகர சபை ஊழியர்கள் மற்றும் கிராம அபிவிருத்திக் குழுக்கள், விளையாட்டுக் கழக உறுப்பினர்கள், அனர்த்த முகாமைத்துவ நிலைய உறுப்பினர்கள், பொலிசார் மற்றும் பாடசாலை மாணவர்களும் இராணுவ வீரர்களுடன் பணியாற்றினர்.
இத் திட்டம் 55 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் எம்.கே.யு.பீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சீ ஐஜீ மற்றும் 551 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எஸ்ஜே காரியகரவன ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் நடத்தப்பட்டது.
4 வது இலங்கை சிங்க படையணி படையினர் இத்திட்டத்தின் வெற்றிக்கு தமது மனிதவளத்தினை வழங்கினர்.