29th June 2023 22:44:29 Hours
இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியும் இராணுவ பதவி நிலை பிரதானியுமான மேஜர் ஜெனரல் சிடி வீரசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, அவர்களால் படையினரின் நலனுக்காக ஆரம்பிக்கப்பட்ட இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் வீட்டு நிர்மாணிப்பு திட்டத்தில் மேலும் ஒரு புதிய வீடு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இவ் வீடு காலி இமதுவயில் வசிக்கும் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் சிப்பாய்க்கு வியாழக்கிழமை (29) உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டது.
இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியின் வழிகாட்டுதலுக்கமைய, இராணுவத் தளபதியின் ஆசீர்வாதத்துடன், சொந்த வீடு இல்லாமல் சிரமத்திற்குள்ளாகும் இராணுவத்தினரின் நிலைமையை கருத்திற்கொண்டு மூன்று கட்டங்களாக வீடு கட்டும் திட்டம் இப்போது நடைபெற்று வருகிறது.
இமதுவயில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு, 15 வருடங்களுக்கும் மேலாக இராணுவத்தில் சேவையாற்றி வரும் 12 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியில் திருமணமான அதிகாரவாணையற்ற அதிகாரிக்கு வழங்கப்பட்டது. பல சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட பயனாளிகள், உறவினர்கள், அழைப்பாளர்கள் மற்றும் அனைத்து நிலையினர்களின் முன்னிலையில், இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சிடி வீரசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களால் கையளிக்கப்பட்டது.
கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் ஆர்எஎ ரணவக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் 12 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினரால் இப் புதிய வீட்டை நிர்மாணிப்பதற்கான மனிதவளம், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப திறன்கள் வழங்கப்பட்டன.
இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியின் கருத்தியல் அடிப்படையில் அனைத்து இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் தெரிவு செய்யப்பட்ட சிப்பாய்களில் ஒருவருக்கு புதிய வீடு நிர்மாணிக்க நடுவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் நிலைய தளபதி எம்பிஎஸ்பீ குலசேகர டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்பீ ஆர்எஸ்பீ, அதிகாரிகள், மற்றும் சிப்பாய்கள் வீடு திறப்பு விழாவில் பங்கேற்றனர்.