Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th June 2023 19:41:04 Hours

மத்திய படையினர்கள் கஹகொல்லவ ‘சங்கவாச’ புனரமைப்பு

துறவிகளின் வேண்டுகோளிற்கினங்க கஹாகொல்ல ஸ்ரீ ஞானராம வன மடாலய இரண்டு மாடி தங்குமிட கட்டிடத்தின் (சங்கவாச) முதலாவது மாடி மத்திய பாதுகாப்பு படை தலைமையகத்தின் பொறியியல் சேவைகள் படையினர் உள்ளடங்கலாக 3 அதிகாரிகள் மற்றும் 30 சிப்பாய்களுடன் பூச்சு பூசப்பட்டு சம்பிரதாயபூர்வமாக வெள்ளிக்கிழமை (ஜூன் 09) பிக்குகளிடம் கையளிக்கப்பட்டது.

மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூஆர்எம்எம் ரத்நாயக்க ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டியு அவர்களிடம் விடுத்த கோரிக்கையை அடுத்து, தியானம் செய்யும் துறவிகள் பயன்படுத்தும் கட்டிடத்திற்கு பூச்சு பூசுவதற்கு தேவையான நிபுணத்துவம் மற்றும் மனிதவளத்தை வழங்குமாறு தனது படையினருக்கு அறிவுறுத்தினார்.