20th June 2023 20:10:46 Hours
அத்தனகல்ல பிரதேசத்தில் உள்ள குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்தின் மூத்த மகன், பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும், 2022 ஆம் ஆண்டு தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சையில் 188 புள்ளிகளைப் பெற்று கொழும்பு றோயல் கல்லூரியில் உயர்கல்விக்கான இடத்தைப் பெறும் பாக்கியத்தைப் பெற்றுள்ளார். ஆனால் நிதி நெருக்கடி காரணமாக கொழும்பில் படிப்பை எவ்வாறு தொடரலாம் என்ற குழப்பத்தில் குடும்பம் இருந்தது.
இதன்படி, மேற்படி பிள்ளையின் பெற்றோர்கள் 61 ஆவது காலாட் படைபிரிவின் சிவில் விவகார அதிகாரியை அணுகி தமது பிள்ளையின் தொடர் கல்விக்கு ஏதாவது உதவிகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
61 ஆவது காலாட் படைப்பிரிவின் தளபதி, மேஜர் ஜெனரல் எச்எம்யுஹேரத் ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ எச்டிஎம்சி பீஎஸ்சி வழங்கிய வழிகாட்டுதல்களின்படி, 61 வது காலாட்படை தலைமையகம் கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவரும், 'அதா-ஹிதா அறக்கட்டளையின் பிரதம அமைப்பாளருமான திரு.பிரசாத் லொகுபாலசூரிய அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதன் பலனாக அவருக்கு தேவையான உதவிகள் வழங்கப்படவுள்ளன.
திரு. பிரசாத் லொகுபாலசூரிய இந்தத் தேவையைக் கேட்டறிந்து ரூ. 30,000/= பிள்ளையின் செலவினங்களுக்காக வழங்கியதுடன் 61 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, இந்த மனிதாபிமானத் தேவை குறித்து அக்கறை கொண்ட அதே நோக்கத்திற்காக தனிப்பட்ட முறையில் தனது சொந்தப் பணத்தில் ஒரு பங்கை ஒதுக்கி, அவர்களின் பிள்ளையின் தொடர்ச்சியான உயர்கல்விக்கு உதவ பெற்றோருக்கு உறுதியளித்தார்.
இந்த பிரகாசமான இளம் மாணவரின் படிப்பிற்கான திறனையும் அவரது எதிர்கால முன்னேற்றத்தையும் உணர்ந்து, 61 வது காலாட்படை பிரிவு தலைமையகம் இரண்டு நன்கொடையாளர்களுடன் தலையிட்டு, தரம் 6 முதல் அவர் பல்கலைக்கழக கல்வியில் நுழையும் வரை அவரது எதிர்கால கல்விக்கு பொருத்தமான திட்டத்தை செயல்படுத்தியது.