18th June 2023 15:28:18 Hours
142 காலாட் பிரிகேட்டின் 14 ஆவது விஜயபாகு காலாட் படையணியின் படையினர் பாடசாலை அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க வியாழன் (ஜூன் 15) கொழும்பு மகாநாம கல்லூரியின் மாணவச் சிப்பாய்களுக்கு 'வரைபட ஆய்வு மற்றும் வழிச்செல்லல் குறித்த பயிற்சி அமர்வை நடத்தினர்.
இந்த பட்டறையின் நோக்கமானது மாணவச் சிப்பாய்களின் வரைபட ஆய்வு பற்றிய அடிப்படை அறிவை வழங்குவதும், வரைபடங்களைப் பயன்படுத்தி வழிசெலுத்துவதற்கான திறன்களை அவர்களுக்கு வழங்குவதும் ஆகும். விரிவுரையானது கோட்பாட்டு மற்றும் நடைமுறை அமர்வுகளை உள்ளடக்கியிருந்தது, வரைபடங்களின் அறிமுகம், சில்வா திசைகாட்டியின் பயன்பாடு போன்றவை தொடர்பிலும் கற்பிக்கப்பட்டது.
14 வது விஜயபாகு காலாட் படையணியின் ஓர் அதிகாரி மற்றும் நான்கு சிப்பாய்கள் பங்கேற்பாளர்களுக்கு முன் தங்கள் நிபுணத்துவம் மற்றும் அனுபவத்தை அளித்தனர் அதேபோன்று, இராணுவ வீரர்கள் சில்வா திசைகாட்டி மற்றும் வரைபட ஆய்வில் பயன்படுத்தப்படும் பிற அத்தியாவசிய கருவிகளின் பயன்பாட்டை நிரூபிக்க தங்கள் நடைமுறை அறிவு மற்றும் திறன்களைப் பயன்படுத்தினர்.
மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மற்றும் 14 ஆவது காலாட் படைப்பிரிவின் தளபதி ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் 142 வது காலாட் பிரிகேட்டின் தளபதி மற்றும் 14 வது விஜயபாகு காலாட் படையணி கட்டளை அதிகாரி ஆகியோர் நிகழ்ச்சியை மேற்பார்வையிட்டனர்.