Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th June 2023 21:08:16 Hours

படையினரால் பாத யாத்திரீயர்கள் வரவேற்பு

வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து கதிர்காமத்திற்கு வருடாந்த பாத யாத்திரையை மேற்கொள்ளும் பக்தர்கள் குமண தேசிய பூங்காவிற்குள் நுழையும், கிழக்கு வாயில்கள் திங்கட்கிழமை (ஜூன் 12) திறக்கப்பட்டன. இக்குழு அம்பாறை உகந்தமலை முருகன் கோவிலை சென்றடைந்தது.

பனாம, குமண போன்ற பிரதேசங்களில் அடர்ந்த காடுகளினூடாக கதிர்காமத்திற்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களை கிழக்கு மாகாண ஆளுநர், அம்பாறை மாவட்ட செயலாளர், லுஹூகல பிரதேச செயலாளர், 24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ சந்திரசிறி ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி, ஆகியோர் ஓகந்தையில் வரவேற்றனர். 242 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எஸ்ஏயுஏ சோலங்கராச்சி ஆர்எஸ்பீ பீஎஸ்சி மற்றும் 23 வது இலங்கை சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரி ஆகியோரின் வழிநடத்தலில் அவர்களுக்கு படையினரால் உணவு மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.

குமண மற்றும் யலா சரணாலயங்களுக்கு நுழையும் பிரதான நுழைவு வாயில்கள் அதே சந்தர்ப்பத்தில் திறக்கப்பட்டன, ஜூலை மாதம் தொடக்கத்தில் நடைபெறவிருக்கும் வருடாந்த கதிர்காமம் எசல திருவிழாவில் பங்கேற்பதற்காக அவர்கள் அடர்ந்த காடுகளின் ஊடாக கதிர்காமத்தை அடைய முடியும்.