16th June 2023 20:56:00 Hours
23 வது காலாட் படைப்பிரிவின் 233 வது காலாட் பிரிகேடின் 9 வது இலங்கை பீரங்கி படையணியின் படையினர் 'ஹெல்ப் ஏஜ் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் கண் பராமரிப்பு சிகிச்சை பிரிவுடன் இணைந்து சனிக்கிழமை (ஜூன் 10) வெலிகந்த சிங்கபுர கெமுனு மகா விஹாரையில் நடமாடும் மருத்துவ மற்றும் கண் மருத்துவ சிகிச்சையினை வெலிகந்த பிரதேச சிரேஸ்ட பிரஜைகளுக்கு வழங்கினர்.
இரண்டு சிகிச்சைகளில் கிட்டத்தட்ட 250 நோயாளிகள் கலந்துகொண்டதுடன், மூக்குக் கண்ணாடிகளைப் பெற தகுதியுடையவர்கள் மற்றும் கண்புரை அறுவை சிகிச்சை தேவையானவர்களுக்கு ஒரு மாத காலத்திற்குள் அதற்கான வசதிகளை செய்ய உள்ளனர்.
இந்நிகழ்வில் 'ஹெல்ப் ஏஜ் ஸ்ரீலங்கா' நிறுவனத்தின் பிரதிநிதிகள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் சுப்ரீம் தொலைக்காட்சியின் பிரதிப் பணிப்பாளர் திரு.காஞ்சன கொடித்துவக்கு ஆகியோர் கலந்துகொண்டனர். 233 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் ஏகேசிஎஸ் டி சில்வா ஆர்எஸ்பீ., 9 வது இலங்கை பீரங்கி படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் எம்ஐஎஸ் சந்திர குமார யுஎஸ்பீ பீஎஸ்சி ஆகியோரின் கண்காணிப்பின் கீழ் படையினர் இந்நிகழ்வை வெற்றிகரமாக நடாத்தினர்.
கிழக்குப் பாதுகாப்புப் படைத் தளபதி வழங்கிய வழிகாட்டுதலின் பேரில் கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகம் சிரேஷ்ட அதிகாரிகள், 23 வது காலாட் படைப்பிரிவு, 233 வது காலாட் பிரிகேட் மற்றும் 9 வது இலங்கை பீரங்கி படையணி படையினர் வெலிகந்த பிரதேச செயலக அதிகாரிகளுடன் இணைந்து இந்தத் திட்டத்திற்கு பங்களித்தனர்.