Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th June 2023 19:15:45 Hours

கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் ‘பொசன்’ கொண்டாட்டத்தில் இணைவு

கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவு 'பொசன்' போயா தினத்தை முன்னிட்டு குருவிட்ட கெமுனு ஹேவா படையணி தலைமையகத்திற்கு அருகில் பக்தி பாடல் வழங்கல், விளக்கு கண்காட்சி மற்றும் ஐஸ்கிரீம் தானம் ஆகியவற்றை 'பொசோன்' போயா தினத்தன்று (ஜூன் 3). முன்னெடுத்தனர்.

கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவு குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் பக்தி பாடல்களைப் பாடினர். குருவிட்ட கிராண்ட் கார்டியன் வணிக நிறுவனத்தால் தானத்திற்கு அனுசரனை வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவு தலைவி திருமதி ஷாலிகா எதிரிசிங்க மற்றும் ஏராளமான சேவை வனிதையர் பிரிவின் பெண்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பல அதிகாரிகளும் உடனிருந்தனர்.