27th February 2023 09:52:11 Hours
55 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன மற்றும் 553 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் ஜனக் பிரேமதிலக ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் 553 வது காலாட் பிரிகேடின் படையினர் நல்லிணக்கத்திற்கான எடுத்துக்காட்டாக பெப்ரவரி 17 தொடக்கம் 19 வரையிலான காலப்பகுதியில் மகா சிவராத்திரி தினத்தினை கொண்டாடுவதற்கு உதவினர்.
553 வது காலாட் பிரிகேட் தலைமையகத்தில் சேவையாற்றும் படையினர் மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு பெரிய பச்சிளைப்பளை மண்டலை பிள்ளையார் கோவில் மற்றும் முள்ளியன் அம்மன் கோவில் வளாகங்களை சுத்தம் செய்தனர். மேலும், மகா சிவராத்திரி தினத்தன்று நடைபெற்ற கோவில் பூஜையில் பக்தர்களுடன் இராணுவத்தினர் கலந்து கொண்டனர்.
அதேவேளை, 10 வது (தொ) விஜயபாகு காலாட் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் கேஎச்சீ சமன்பிரிய அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் படையினரால் 18 பெப்ரவரி 2023 அன்று நாகர்கோவிலில் உள்ள பழமையான நாகதம்பிரான் கோவில் வளாகத்தில் மாலை நேர சிறப்பு கோவில் பூஜை ஏற்பாடு செய்யப்பட்டது. மறுநாள் காலை ஸ்ரீ முருகன் கோவில், நாகர் கோவிலில் பக்தர்களுக்கு கோப்பி பரிமாறப்பட்டது.
அதேநேரம், 12 வது (தொ) விஜயபாகு காலாட் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் டபிள்யூடிஎஸ் நயனஜீவ, அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், படையினர், வெற்றிலை கேணி பிள்ளையார் கோவிலில் பக்தர்களுக்கு சிற்றுண்டி மற்றும் தேநீர் வழங்கியயதுடன், அன்று மாலை நடந்த பூஜையில் படையினர் கலந்து கொண்டனர்.கோவில் அரங்காவல் சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அப்பகுதியில் விழா சிறப்பாக நடைபெற உதவிய படையினர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.