13th March 2023 19:21:02 Hours
21 வது காலாட் படைப்பிரிவு மற்றும் வடக்கு மற்றும் மத்திய முன்னரங்கு பராமரிப்பு பிரதேசத்தின் படையினரின் ஆதரவுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க ருவன்வெலி மகா சேயாவைச் சுற்றி உள்ள 800 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட 'வெலி மலுவ' வில் ஆண்டு தோறும் நடைபெறும் மணல் பரவல் நிகழ்வு விழா மார்ச் 3 - 5 வரை நடைபெற்றது.
வன்னிப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சம்பகர ரணசிங்க அவர்களின் பணிப்புரையின் பிரகாரம் 250 இற்கும் மேற்பட்ட படையினர் மூன்று நாட்களாக இந்தச் சிறப்புமிக்க செயற்திட்டத்தில் பங்குபற்றினர். வன்னிப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி இந்த திட்டத்தை ஒருங்கிணைத்து வழிநடத்தினார்.
நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.